Headlines News :
Home » , » உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த துவிச்சக்கரவண்டி

உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த துவிச்சக்கரவண்டி

Written By Unknown on Thursday, January 2, 2014 | 4:46 AM

பிரிட்டனை சேர்ந்த ஜேசன் ரூகே என்பவர் மணித்தியாலத்துக்கு 177 கிலோமீற்றர் (112 மைல் ) வேகத்தில்   பயணிக்க கூடிய துவிச்சக்கர வண்டியொன்றை தயாரித்துள்ளார்.


3618Martin


மோட்டார் சைக்கிளோட்டப் பந்தய வீரரான கை மார்ட்டினின்  கோரிக்கையின் பேரில் இந்த துவிச்சக்கர வண்டியை ஜேஸன் ரூகே தயாரித்தார். இந்த சைக்கிளில்  கை மார்ட்டின் 181 கிலோமீற்றர் ((112.94 மைல்) வேகத்தில் பயணித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.


இதற்குமுன் நெதர்லாந்தைச் சேர்ந்த செபஸ்ட்டியன் போவியர் 133.78 கிலோமீற்றர் வேகத்தில்  துவிச்சக்கர வண்டியில் பயணித்தமையே உலக சாதனையாக இருந்தது.41 வயதான ஜேசன் ரூகே துவிச்சக்கர வண்டி தயாரிப்பு நிலையமொன்றை நடத்தி வருகிறார்.   இந்த துவிச்சக்கரவண்டியைத் தயாரிப்பதற்கு 10 நாட்கள் தேவைப்பட்டதாகவும் இதற்காக   5000 ஸ்ரேலிங் பவுண்களை செலவிடப்பட்டதாகவும்  தெரிவித்துள்ளார்.





Share this post :

Post a Comment

 
Support : Gossip Tamil | GPT Template | GPT Template
Copyright © 2011. Gossip Tamil - All Rights Reserved
Template Created by Gossip Tamil Published by GPT Template
Proudly powered by Blogger