சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டு உள்ள ஒருநாள் போட்டியின் பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர் வீராட்கோலி தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். இந்திய அணி கேப்டன் டோனி தொடர்ந்து 6-வது இடத்தில் உள்ளார். ஷிகார் தவான் ஒரு இடம் பின்தங்கி 8-வது இடத்தில் இருக்கிறார்.
பந்து வீச்சில் டாப் 10 வரிசையில் ஜடேஜா மட்டுமே இடம் பிடித்தார். அவர் 5-வது இடத்தில் உள்ளார். அணிகளின் தரவரிசையில் இந்தியா 2-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு பின்தங்கியது. ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், இலங்கை 2-வது இடத்திலும் உள் ளன.

Post a Comment