உத்தரபிரதேசம் இது பிரச்சினைகளுக்கு பெயர் போன மாநிலம் நாட்டின் மிகப்பேரிய மாநிலமான உத்தரபிரதேசம் படானில் இரண்டு சிறுமிகள் கற்பழித்து மரத்தில் தூக்கிலிட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாலியல் குற்றச்சாட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து விட்டது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதனால் மாநிலத்தில் சமாஜ்வாடி அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. . ஆனால் சமாஜ்வாடி அரசோ ஊடங்களை குற்றம் சாட்டி வருகிறது.
இந்த நிலையில் இந்த பிரச்சினை அடங்குவதற்குள் இந்த மாநிலத்தில் வயலில் சிறுநீர் கழித்த சிறுவனின் மர்ம உறுப்பை வயல் உரிமையாளர் அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டம் கோராலி கிராமத்தைச் சேர்ந்தவர் சேஷ்ராம். செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார். அவரது மகன் ரித்தேஷ்(5). ரித்தேஷ் அதே ஊரைச் சேர்ந்த ஒருவரின் வயலில் சிறுநீர் கழித்துள்ளான். இதை பார்த்த வயல் உரிமையாளரான துர்கேஷ் மவுரியா மற்றும் அவரது மகன் சேர்ந்து ரித்தேஷை பிடித்து அடித்துள்ளனர். அப்படியும் ஆத்திரம் தீராத அவர்கள் சிறுவனின் மர்ம உறுப்பை அறுத்துவிட்டனர். ரத்தம் கொட்ட கொட்ட சிறுவன் வலியால் துடித்தபடியே ஒரு வழியாக வீட்டுக்கு சென்று நடந்ததை கூறினான். இதையடுத்து சிறுவன் அலகாபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மவுரியா மற்றும் அவரது மகனை தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அந்த மாநிலத்தை 3 மாநிலங்களாக பிரிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது

Post a Comment