Headlines News :
Home » » வீடியோ கேம்ஸ் காட்சிகளை பார்த்து சகோதரியை கற்பழித்த பள்ளி மாணவன்

வீடியோ கேம்ஸ் காட்சிகளை பார்த்து சகோதரியை கற்பழித்த பள்ளி மாணவன்

Written By Unknown on Tuesday, June 10, 2014 | 7:30 AM

இங்கிலாந்து நாட்டில் வீடியோ கேம்ஸ் விளையாட்டில் பார்த்த காட்சிகளை செயல்படுத்த நினைத்து தனது 8 வயது சகோதரியை 13 வயது பள்ளி மாணவன் கற்பழித்த சம்பவம் நடந்துள்ளது. 

எக்ஸ் பாக்ஸ் இணையதளத்தின் வீடியோ கேம்ஸ் காட்சிகளை பார்த்த பின்பு அதனை நடைமுறைப்படுத்தி பார்க்க விரும்பியுள்ளான்.அதற்காக தனது சகோதரியை தேர்வு செய்தான். ஏனென்றால் அவள் மிக குறைந்த வயதுடையவள். மேலும், நடந்ததை மீண்டும் நினைவில் வைத்திருக்கமாட்டாள் என கருதியதாக அவன் கூறியுள்ளான். 

இதனை அடுத்து பிளாக்பர்ன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீசார் அவனை ஆஜர்படுத்தினர். அங்கு சகோதரியை தவறான நடத்தைக்கு பயன்படுத்தியதையும், கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபட்டதையும் சிறுவன் ஒப்பு கொண்டான்.இதனை அடுத்து, சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

அவன் தனது உறவினர்களுடன் அனுப்பப்பட்டான். எனினும், சகோதரியிடம் இருந்து தனித்து வைக்கப்பட்டு உள்ளான். இந்த சம்பவத்தை அடுத்து அந்நாட்டு அரசு, 2014ம் ஆண்டு இறுதிக்குள், வீடியோ கேம்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் விளையாட்டுகள் உட்பட இன்டெர்நெட் கருவிகள் கொண்டு வயதுக்கு வந்தோர் பார்க்கும் காட்சிகளை பார்ப்பதற்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளது.

சிறுவன் பயன்படுத்திய எக்ஸ் பாக்ஸ் இணையதளத்தின் அதிகாரிகள் கூறும்போது, இதுபோன்ற காட்சிகளை பெற்றோர் அனுமதியுடன் பார்க்கும் வகையில் தடுப்பு முறைகளை பயன்படுத்தலாம் என்று கூ
Share this post :

Post a Comment

 
Support : Gossip Tamil | GPT Template | GPT Template
Copyright © 2011. Gossip Tamil - All Rights Reserved
Template Created by Gossip Tamil Published by GPT Template
Proudly powered by Blogger