Headlines News :
Home » » தோழியை உயிருடன் கொளுத்திய கன்னியாஸ்திரி, கேரளாவில் கொடூரம்

தோழியை உயிருடன் கொளுத்திய கன்னியாஸ்திரி, கேரளாவில் கொடூரம்

Written By Unknown on Friday, June 6, 2014 | 12:46 AM

திருவனந்தபுரம் அருகே கன்னியாஸ்திரிகள் படிக்கும் மடத்தில் தோழியை மற்றொரு கன்னியாஸ்திரியை மண்ணெண்ணெய் ஊற்றி கொல்ல முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் அருகே பரவூரில் 9 மாணவிகள் படிக்கும் கன்னியாஸ்திரிகள் மடம் ஒன்று உள்ளது. பரவூர் பகுதியைச் சேர்ந்த டெல்பி மற்றும் அவரது உறவினர் ரேச்சல் ஆகியோரும் இந்த மடத்தில் தங்கி படித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு டெல்பி தனது அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது சமையல் அறையில் இருந்த மண்ணெண்னையை எடுத்து வந்த ரேச்சல், டெல்பி மீது ஊற்றி தீ வைத்து விட்டு ஓடியுள்ளார்.

இந்நிலையில், உடலில் தீப்பிடித்ததால் டெல்பி அலறி துடித்ததில், அவரது அலறல் சத்தம் கேட்டு மற்ற மாணவிகள் திடுக்கிட்டு விழித்துக் கொண்டனர்.
பின்னர், அவர்கள் டெல்பி உடலில் பிடித்த தீயை அணைத்து அவரை காப்பாற்றியுள்ளனர்.

அதன் பிறகு அந்த மடத்தின் நிர்வாகிகள் டெல்பியை திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். டெல்பி உடலில் 40 சதவீதம் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இதுபற்றி திருவனந்தபுரம் பொலிசார் வழக்குப்பதிவு செய்து ரேச்சலை கைது செய்து விசாரனை செய்து வருகின்றனர்

Share this post :

Post a Comment

 
Support : Gossip Tamil | GPT Template | GPT Template
Copyright © 2011. Gossip Tamil - All Rights Reserved
Template Created by Gossip Tamil Published by GPT Template
Proudly powered by Blogger