ராமேஸ்வரத்தில் உள்ள ஒரு விடுதியில் பெண்கள் உடை மாற்றுவதை ரகசியமாக படமெடுத்து வந்த வயதான விடுதி ஊழியர்கள் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் அனுமதி பெறாமல் வீடுகள், சத்திரங்களில் சுற்றுலா பயணிகளை தங்க வைத்தும் சிலர் வருமானம் ஈட்டி வருகின்றனர்.
ராமேஸ்வரம், கிழக்கு ரத வீதியில் உள்ள விடுதி ஒன்றில் சில நாட்களுக்கு முன், தங்கியிருந்த பெண், அறையில் உடை மாற்றிக் கொண்டிருந்த போது, கதவில் உள்ள ஓட்டை வழியாக விடுதி ஊழியர்கள் தன்னை பார்ப்பதை கவனித்தார்.
பதறிப் போன அந்தப் பெண் உடனடியாக கோயில் காவல் நிலையத்துக்கு சென்று புகார் செய்துள்ளார். காவல்துறையினர் உடனே விடுதிக்கு வந்து ஊழியர்களிடம் விசாரித்தனர்.
இதையடுத்து விடுதி மேலாளர் தொட்டப்பன் (61), ஊழியர்கள் ராஜேந்திரன் (63), சின்னையா (53) மற்றும் சீனிவாசன் (50) ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், அறைகளில் தங்கியிருக்கும் பெண்கள் குளிக்கும் போதும், உடை மாற்றும் போதும் நிர்வாண படம் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்களில் விடுதி ஊழியர்கள் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.
இதையடுத்து, விடுதியில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதில் அறைகளின் கதவுகள், தடுப்புகளில் பெரிய மற்றும் சிறிய ஓட்டைகள் போடப்பட்டிருந்தது தெரிந்தது. இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Post a Comment