Headlines News :
Home » » உ.பி.யில் மீண்டும் கொடூரம்: மேலும் இரு சிறுமிகளை மூன்று பேர் கும்பல் கற்பழித்தது

உ.பி.யில் மீண்டும் கொடூரம்: மேலும் இரு சிறுமிகளை மூன்று பேர் கும்பல் கற்பழித்தது

Written By Unknown on Saturday, June 7, 2014 | 7:26 PM

உத்திரப்பிரதேச மாநிலத்தின் பதான் மாவட்டத்தில் கடந்த வாரம் இரு சிறுமிகள் மூன்று பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அதே போன்றதொரு கொடூரம் அங்கு நிகழ்ந்துள்ளது. இது இந்தியாவுக்கு சர்வதேச அரங்கில் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

அம்மாநிலத்தின் இடா மாவட்டதிற்குட்பட்ட சியாப்பூர் கிராமத்தை சேர்ந்த 14 மற்றும் 15 வயதே ஆன இரு சிறுமிகள் மூன்று பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டுள்ளனர். தங்களது வீட்டிலிருந்து அங்குள்ள அரிசி ஆலைக்கு அச்சிறுமிகள் சென்றபோது அவர்களை கடத்திச் சென்ற அக்கும்பல் அருகிலுள்ள காட்டுப்பகுதியில் வைத்து கற்பழித்துள்ளது. இச்சம்பவம் கடந்த வியாழனன்று நடைபெற்றுள்ளது.

அச்சிறுமிகளின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்தனர். அச்சிறுமிகளுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையிலும் அவர்கள் கற்பழிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது போன்ற குற்றங்கள் அம்மாநிலத்தில் அதிகரித்து வரும் நிலையில் அதை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், நாடு முழுவதும் கற்பழிப்புகள் நடைபெற்று வரும் நிலையில் பத்திரிக்கைகள் இச்சம்பவத்தை பெரிதாக்கி வருவதாக அம்மாநில அரசு கூறிவருவது குறிப்பிடத்தக்கது. 
Share this post :

Post a Comment

 
Support : Gossip Tamil | GPT Template | GPT Template
Copyright © 2011. Gossip Tamil - All Rights Reserved
Template Created by Gossip Tamil Published by GPT Template
Proudly powered by Blogger