Headlines News :
Home » » L.C.D T.V பரிசு கொடுத்து இளம் பெண்களை வலையில் வீழ்த்திய மோசடி மன்னன்

L.C.D T.V பரிசு கொடுத்து இளம் பெண்களை வலையில் வீழ்த்திய மோசடி மன்னன்

Written By Unknown on Thursday, June 5, 2014 | 3:02 AM

மோசடி மன்னன் வேல் முருகனின் வலையில் வி.ஐ.பி.க்கள் மட்டுமல்லாது ஏராளமான பெண்களும் வீழ்ந்ததாக கூறப்படுகிறது. பணம் இல்லாத பெண்கள் தங்களிடம் இருந்த தங்க நகையை கொடுத்து ஆன் லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து பணத்தை இரட்டிப்பாக்கி தருமாறு கூறி இருக்கிறார்கள். 

அவ்வாறு நகையை கொடுத்த பெண்களிடம் உங்கள் பணத்தை முதலீடு செய்ததற்காக மும்பை நிறுவனம் ஒன்று எல்.சி.டி. டி.வி.க்களை பரிசாக அனுப்பி உள்ளது எனக்கூறி 15 பெண்களுக்கு அவற்றை பரிசாக கொடுத்துள்ளார். இதையறிந்த அப்பகுதியை சேர்ந்த மேலும் பலர் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர்.

மேலும், தன் வலையில் வீழ்ந்த ஒரு இளம்பெண்ணை திருமண ஆசை காட்டி அவரிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை கறந்ததோடு அவரை பலாத்காரம் செய்துள்ளார். அதனை வீடியோ எடுத்து இன்டர்நெட்டில் போட்டு விடுவதாக மிரட்டி பணம் பறித்ததாகவும், அதற்கு மேலும் ஒருவர் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. குடும்ப மானம் கருதி அந்த பெண் புகார் ஏதும் கொடுக்காததால் அதனை வாய்ப்பாக பயன்படுத்தி வேல்முருகன் கூலிப்படை மூலம் மேலும் பலரை மிரட்டி பணம் பறித்துள்ளார்.

இவரிடம் ஏமாந்த வி.ஐ.பி.க்கள் பலரும் மானம் கருதி போலீசில் புகார் கொடுக்காததை தனக்கு சாதகமாக பயன்படுத்தி உள்ளார். எனவே வேல்முருகனை காவலில் எடுத்து விசாரிக்கும் போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
Share this post :

Post a Comment

 
Support : Gossip Tamil | GPT Template | GPT Template
Copyright © 2011. Gossip Tamil - All Rights Reserved
Template Created by Gossip Tamil Published by GPT Template
Proudly powered by Blogger