Headlines News :
Home » » 10 வருடங்களில் 9 குழந்தைகளை பெற்று 87 மாதங்கள் கர்ப்பிணியாக இருந்த 'சூப்பர் மம்மி'

10 வருடங்களில் 9 குழந்தைகளை பெற்று 87 மாதங்கள் கர்ப்பிணியாக இருந்த 'சூப்பர் மம்மி'

Written By Unknown on Wednesday, July 2, 2014 | 3:59 AM


இலங்கிலாந்தின் கெனட்டை சேர்ந்தவர் ஜேசன் (வயது 41) இவரது மனைவி தோனியா (வயது 40). இந்த தம்பதியினருக்கு மொத்தம் 9 குழந்தைகள் உள்ளன. தோனியா 10 வருடங்களில் 9 குழந்தைகளை பெற்று அவர்களை பாதுகாப்பாக வளர்த்துவரும் 'சூப்பர் மம்மி'யாக திகழ்கிறார். தோனியா சுமார் 7 வருடங்களுக்கு மேலாக (87 மாதங்கள்) கர்ப்பமாகவே இருந்துள்ளார். தோனியாவின் முதல் குழந்தைக்கு வயது 12 அவருடையை, கடைசி குழந்தைக்கு வயது 2 ஆகும். என்னுடைய 9 குழந்தைகளையும் பார்க்கும்போது எல்லாம் மகிழ்ச்சி அடையும் மற்றவர்கள் நான் மிகவும் கஷ்டப்படுகிறேன் என்று நினைக்கிறார்கள் ஆனால் நான் சமையல் அறையில் சுறுசுறுப்பாக வேலை செய்து எனது குழந்தைகளை கவனித்து வருகின்றேன் என்று தோனியா கூறியுள்ளார். 

தோனியாவை பிறந்தநாள் விழாவில் பார்த்து காதல் வயப்பட்ட ஜேசன் அவரை கடந்த 2000ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டுள்ளார். பின்னர் இருவரும் இல்லறவாழ்க்கையை தொடங்கியுள்ளனர். மிகவும் மகிழ்ச்சியாகவே அவரது திருமண வாழ்க்கை செல்வதாக தோனியா கூறியுள்ளார். எனக்கு 9 குழந்தைகள் உள்ளதால் எனது கணவருக்கு வேறுவேலையே இல்லையா? என்று மற்றவர்கள் அவரை வெளிப்படையாகவே கிண்டல் செய்வார்கள். இதனால் அவர் கோபம அடைவார். ஆனால் அவர் எங்களையும் கவனித்துக் கொண்டு வேலையையும் சிறப்பாக செய்து வருகிறார். மிகவும் கடிணமாக உழைக்கும் அவர் எங்களையும் மிகவும் அதிகமாக நேசிக்கிறார். இவ்வாறு நடந்து கொள்வது மிகவும் கடிணம் ஆனால் அவர் மிகவும் நன்றாக செயல்படுவார். நாங்கள் ஒரு நல்ல குழுவை உருவாக்கியுள்ளாம். என்று புன்னகைத்து கொண்டே தானியா கூறியுள்ளார். ஜேசன் சொந்தமாக ஒரு தச்சு தொழில் செய்து வருகிறார். யாருடைய உதவியும் இல்லாமல் 7 பெண் குழந்தைகள் மற்றும் 2 ஆண் குழந்தைகள் மற்றும் தொழிலை ஜேசன் கவனித்து வருகிறார்.  

பெரிய குடும்பத்திற்காக நாங்கள் குழந்தைகளை பெற்றுக் கொள்ளவில்லை. முதல் குழந்தையை வயிற்றில் சுமந்த தோனியாவிற்கு அது நிலைக்கவில்லை. தோனியா 6 மாத கர்ப்பிணியாக இருந்தபோது அவருடையை குழந்தைக்கு இதய துடிப்பு இல்லை என்று கூறிவிட்டனர். பின்னர் அவருடைய கர்ப்பம் கலைக்கப்பட்டுள்ளது. குழந்தையை தோனியாவிடம் டாக்டர்கள் காட்டவே இல்லை. தனது முதல் குழந்தையை இழந்த தோனியா துடித்துவிட்டார். இதனை அடுத்து அவருக்கு குழந்தை மீதான பாசம் அதிகரித்துவிட்டது. இதனையடுத்து அவர் மீண்டும் கர்ப்பம் ஆகியுள்ளார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லவில்லை. 2001ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர்களுக்கு குழந்தை பிறந்தது. வீட்டில் வைத்தே தோனியாவிற்கு குழந்தை பிறந்ததுள்ளது. 

அடுத்த 12 மாதங்கள் கழித்து 2002 அக்டோபர் மாதம் 14ம் தேதி அவர்களுக்கு மற்றொரு குழந்தை பிறந்தது. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் 2003 மற்றும் 2004ம் ஆண்டுகளில் அக்டோபர் மாதம் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அவர்களுடைய குழந்தைகள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.  தான் திருமணம் ஆனதில் இருந்தே கர்ப்பமாகவே இருந்தேன். நான் கர்ப்பமாக இருப்பதை மிகவும் விரும்புகிறேன். என்று தோனியா சிறித்து கொண்டே கூறியுள்ளார். கடந்த 2012ம் ஆண்டு தங்களது குழந்தைகள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்ததை அடுத்து தோனியா குழந்தை பெற்றுக் கொள்வதை நிறுத்திக் கொண்டார். தோனியாவிற்கு இரத்த அழுத்தம் ஏற்பட்டதை அடுத்து நிறுத்திக் கொண்டுள்ளனர். 

அவர்களது உணவு செலவுக்கு மட்டும் வாரம் 300 பவுண்ட்களுக்கு மேலும் செலவு செய்வதாகவும், குழந்தைகளை நல்லபடியாக கவனித்து கொண்டு மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருவதாக தோனியா கூறியுள்ளார். 
Share this post :

Post a Comment

 
Support : Gossip Tamil | GPT Template | GPT Template
Copyright © 2011. Gossip Tamil - All Rights Reserved
Template Created by Gossip Tamil Published by GPT Template
Proudly powered by Blogger