Headlines News :
Home » , , , , » வடக்கு தமிழர்களின் 7 லட்சம் வாக்குகளுக்கு மஹிந்தரும் மைத்திரியும் வலை விரிப்பு!

வடக்கு தமிழர்களின் 7 லட்சம் வாக்குகளுக்கு மஹிந்தரும் மைத்திரியும் வலை விரிப்பு!

Written By Unknown on Saturday, November 29, 2014 | 7:58 PM


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியை நிச்சயிப்பதில் வடக்கு மாகாண வாக்குகள் முக்கியத்துவம் பெறுமென அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில் வடக்கு மாகாணத்தில் உள்ள சுமார் ஏழு இலட்சம் வாக்காளர்களைக் கவரும் பணியில் அரச தரப்பு வேட்பாளர் மஹிந்த ராஜபக்‌ஷவும், பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் மும்முரமாக ஈடுபடுவார்கள் என அரசியல் அவதானிகள் ஊகம் தெரிவித்துள்ளனர். 

ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் அவர்களின் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக வடக்கு மாகாணம் விளங்குமெனக் கூறப்படுகின்றது. 2005ஆம் ஆண்டில் நடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது விடுதலைப் புலிகள் இயக்கம் மக்கள் வாக்களிப்பதற்குத் தடைவிதித்தது. அந்தத் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ 48 லட்சத்து 87ஆயிரத்து 152 வாக்குகளையும், ரணில் விக்கிரமசிங்க 47 லட்சத்து 6 ஆயிரத்து 366 வாக்குகளையும் பெற்றனர். அதன் பிரகாரம் ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 786 வாக்குகள் வித்தியாசத்திலேயே மஹிந்த ராஜபக்‌ஷ வெற்றி பெற்றார். 

இம்முறை வடக்கு மாகாணத்தில் 2013 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் 7 லட்சத்து 19 ஆயிரத்து 477 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 4 லட்சத்து 26 ஆயிரத்து 813 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 68 ஆயிரத்து 600 பேரும், மன்னார் மாவட்டத்தில் 75 ஆயிரத்து 737 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 53 ஆயிரத்து 683 பேரும், வவுனியா மாவட்டத்தில் 94 ஆயிரத்து 644 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
Share this post :

Post a Comment

 
Support : Gossip Tamil | GPT Template | GPT Template
Copyright © 2011. Gossip Tamil - All Rights Reserved
Template Created by Gossip Tamil Published by GPT Template
Proudly powered by Blogger