Headlines News :
GossiP Tamil. Powered by Blogger.

அழகு

Showing posts with label ஆர்யா. Show all posts
Showing posts with label ஆர்யா. Show all posts

ஆர்யா-விஜய் சேதுபதி இவர்களுடன் இணைகிறார் ஷாம்...


‘இயற்கை’, ‘பேராண்மை’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன், யுடிவி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து, இயக்கும் புதிய படம் ‘புறம்போக்கு’. இப்படத்தில் ஆர்யா-விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இப்போது இவர்களுடன் நடிகர் ஷாமும் இணைந்துள்ளார்.

சமூகத்தில் ஏற்படும் சீர்கேடுகளை எதிர்த்து போராடும் ஒரு இளைஞன், அவனுக்கு துணையாக மற்றொரு இளைஞன். இவர்கள் இருவருக்கும் சிம்ம சொப்பனமாக ஒரு போலீஸ் அதிகாரி இருக்கிறார். அந்த போலீஸ் அதிகாரி வேடத்தில்தான் ஷாம் நடிக்கிறாராம். இவர் ஏற்கெனவே எஸ்.பி.ஜனநாதனின் ‘இயற்கை’ படத்திலும் நடித்துள்ளார்.

இப்படத்தின் நாயகியாக கார்த்திகா ஒருவரே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தில் வேறு கதாநாயகி இல்லை. ஜனவரி 14-ந் தேதி குலுமணாலியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தி, இறுதிக்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த முடிவு செய்துள்ளனர்.

மது இல்லாத புத்தாண்டு,சென்னையில் சினிமாத்துறையினர் புது முயற்சி

வருகிற 2014 புத்தாண்டு தினம் உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் வாடிக்கையாளர்களை கவர இப்போதே களைகட்டத் துவங்கி உள்ளன.


Arya_20120404010442


அங்கு மது விருந்துகளுக்கு பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக டிக்கெட்டுகள் அச்சிட்டு விற்கப்படுகின்றன. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளிலும் மதுவிருந்து கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. அன்றைய தினம் இதுவரை மது அருந்தி பழக்கமில்லாத இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை குடிப்பழக்கத்தில் தள்ளிவிட நட்பு வட்டாரங்கள் தயாராகி வருகின்றன.


இப்படிப்பட்ட சூழலில் நடிகர், நடிகைகளை வைத்து மது இல்லாத புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வருகிற 31–ந்தேதி இரவு கிண்டியில் உள்ள கேம்ப கோலா மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இதில் நடிகர்கள் ஆர்யா, சிம்பு, பரத், பிரசன்னா, சந்தானம், யுவா


நடிகைகள் சினேகா, லட்சுமிராய், அனுயா, ஷாலி, உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த மது இல்லாத புத்தாண்டு நிகழ்ச்சியில் குடும்பத்தினர் குழந்தைகளுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் விளையாட்டு, பாட்டு, இசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.


ஐந்து நட்சத்திர ஓட்டல் உணவு வகைகளும் பரிமாறுகின்றனர். வெண்காம், ஷான், மற்றும் தினி தொண்டு அமைப்பினர் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்த மது இல்லாத புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு நடிகர் பரத் தூதுவராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதில் வசூலாகும் தொகை ஏகம் பவுண்டேஷன் அறக்கட்டளைக்கு வழங்கப்படுகிறது.

பந்தாடும் நாயகர்கள், பாவம் கார்த்திகா

ஆர்யா மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் புறம்போக்கு படத்தில் ஆர்யா, சமூக சேவகராகவும், விஜய் சேதுபதி ரயில்வே ஊழியராகவும் நடிக்கின்றார்களாம். இருவரும் நண்பர்களாக இருந்து பின்னர் ஒரு பெண்ணின் காதலால் மோதிக்கொள்வதுதான் கதை. இந்த கதையில் நாயகியின் வேடத்திற்கு கோ, அன்னக்கொடி ஆகிய படங்களில் நடித்த கார்த்திகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


karthika


கார்த்திகா யாருக்கு ஜோடி? ஆர்யாவுக்கா? அல்லது விஜய் சேதுபதிக்கா? என்ற சஸ்பென்ஸ் படக்குழுவினரை போட்டு குழப்பியது. ஆர்யாவிடம் இதுகுறித்து கேட்டபோது கார்த்திகா விஜய் சேதுபதிக்குத்தான் ஜோடி எனக்கு ஜோடி இன்னும் முடிவாகவில்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் விஜய்சேதுபதியோ கார்த்திகாவின் உயரத்திற்கு ஆர்யா தான் சரிப்பட்டு வருவார். எனக்கு வேறொரு ஜோடியை இயக்குனர் இனிமேல்தான் முடிவு செய்வார் என்று கூறியுள்ளார்.


கடைசியாக கார்த்திகா நடித்த படம் படு பிளாப் ஆனதால் இருவருமே அவருடன் ஜோடி விரும்பவில்லையோ என படக்குழுவினர் கிசுகிசுத்தனர். இந்த தகவல் கேட்டு இயக்குனர் அதிர்ச்சி அடைந்துள்ளார். கார்த்திகா இருவருக்குமே ஜோடி இல்லை. அவர் இந்த படத்தில் தனியாகத்தான் நடிக்கிறார் என்று கூறினார். மேலும் இந்த படத்தின் முதல் டீஸர் வரும் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் செய்தியாளர்களிடம் கூறினார்.

11.12.13 ஆர்யாவுக்கு மறக்க முடியாத பிறந்த தினம்...

ஆர்யாவுக்கு மறக்க முடியாத பிறந்த தினம் இது!


209015,xcitefun-arya1
11.12.13 .. நூற்றாண்டுக்கு ஒரு முறை வரும் தேதி என்பதால் இந்தத் தேதியை உலகமே விசேஷ தினமாகக் கொண்டாடி வருகிறது. ஆர்யாவும் இந்தத் தேதியை வாழ்நாளில் மறக்கமுடியாது. காரணம் இன்று தான் அவர் பிறந்த தேதி. இந்த ஆண்டு அடுத்தடுத்து ராஜா ராணி, ஆரம்பம், இரண்டாம் உலகம் என மூன்று படங்களி்ல் நடித்திருந்தார் ஆர்யா. பிறந்த நாள் என்பதற்காக லீவு போட்டு விட்டு கேக் வெட்டிக் கொண்டிருக்காமல், மகிழ் திருமேனி இயக்கும் மீகாமன் படத்தில் நடிக்கப் போய்விட்டார் ஆர்யா. (பார்ட்டியெல்லாம் சாயங்காலம்தானாம்!) வரும் நாட்களிலும் ஆர்யாவுக்கு பெரிய படங்கள் காத்திருக்கின்றன. அடுத்து அவர் எஸ் பி ஜனநாதன் இயக்கும் படத்திலும், அதன் பிறகு தனது ஆஸ்தான இயக்குநர் எம் ராஜேஷ் இயக்கத்திலும் நடிக்கிறார். இதே பரபரப்பு, பிஸியுடன் இனிவரும் ஆண்டுகளிலும் திகழ இன்று பிறந்த நாள் காணும் ஆர்யாவை வாழ்த்துவோம்!

 
mas template
Support : Gossip Tamil | GPT Template | GPT Template
Copyright © 2011. Gossip Tamil - All Rights Reserved
Template Created by Gossip Tamil Published by GPT Template
Proudly powered by Blogger