Headlines News :
GossiP Tamil. Powered by Blogger.

அழகு

Showing posts with label படத்தில். Show all posts
Showing posts with label படத்தில். Show all posts

மலையாள படத்தில் சந்தானம் முக்கிய வேடத்தில்....

santhanam_124_35201175010123 copy

மலையாள  சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான், மலையாள திரையுலகில் முன்னணி நாயகனாக உள்ளார்.தற்போது இவர் மலையாளத்தில் ‘சலாலா மொபைல்ஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் நஸ்ரியா தான் துல்கருக்கு ஜோடி. மேலும் படத்தில் நஸ்ரியா முதன் முறையாக ‘உம்மச்சி ராக்’ என்ற ஒரு பாடல் ஒன்றையும் பாடியிருக்கிறார். இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.




இந்நிலையில்  ‘சலாலா மொபைல்ஸ்’ படத்தில் சந்தானம் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்திருக்கிறாராம். இதன்மூலம் அவர் மலையாளத்திலும் அடியெடுத்து வைக்கிறார். இதில் கோயம்புத்தூரைச் சேர்ந்தவராக நடித்திருக்கும் சந்தானம், இதுவரை நடித்திராத வித்தியாசமான கெட்டப்பிலும் நடித்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.ஆனால் படம் வரும்வரை இந்த விஷயத்தை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்களாம். படம் வரும் ஜனவரி-23ஆம் தேதி வெளியாகிறது.



லிங்குசாமி படத்தில் சூர்யாவுடன் மும்பை நடிகை நடனமாம்....

actre-suriya-actor-surya-167362

லிங்குசாமி படத்தில் சூர்யாவுடன் மும்பையைச் சேர்ந்த நடிகை ஒருவர் நடனமாடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிங்கம் 2 வெற்றியைத் தொடர்ந்து சூர்யா, லிங்குசாமி தயாரித்து இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் மும்பையில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது அங்கு படத்தின் பாடல் காட்சி ஒன்றை படமாக்கி வருகிறார்களாம்.


இதற்காக எண்பது லட்ச ரூபய் செலவில், மும்பை மும்பை போரிவாலி பகுதியில் மிகப்பெரிய செட் ஒன்று அமைத்து அதில் பாடல்காட்சியை படமாக்குகிறார்களாம். இந்தப்பாடலில் சூர்யாவுடன் மும்பையைச் சேர்ந்த நடிகை ஒருவர் ஆடுவார் என தெரிகிறது. யுவனின் துள்ளல் இசையில் ரஞ்சித்தின் குரலில் தயாராகியுள்ள இந்தப்பாடலுக்கு ராஜுசுந்தரம் வித்தியாசமான முறையில் நடனம் அமைக்கிறார்.பாடல் காட்சியை எடுத்தப் பிறகும் கூட படப்பிடிப்பு இரண்டு வாரங்களுக்கு மும்பையில் தொடரும் என சொல்லப்படுகிறது. அதன் பின்னர் கோவாவுக்குச் சென்று பத்து நாட்கள் படப்பிடிப்பை நடத்த இருக்கிறார்கள்.

 
mas template
Support : Gossip Tamil | GPT Template | GPT Template
Copyright © 2011. Gossip Tamil - All Rights Reserved
Template Created by Gossip Tamil Published by GPT Template
Proudly powered by Blogger