Headlines News :
GossiP Tamil. Powered by Blogger.

அழகு

Showing posts with label மட்டைப்பந்து. Show all posts
Showing posts with label மட்டைப்பந்து. Show all posts

இந்திய அணி 98 ஓட்டங்கள் பின்னனியில்

இந்திய அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையில் இடம்பெற்று வரும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இறுதி நாள் ஆட்டம் இன்றாகும்.


இந்த நிலையில், தமது இரண்டாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இந்திய அணி, நேற்றைய நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கட்டுகளை இழந்த நிலையில், 68 ஓட்டங்களை பெற்றிருந்தது.


முன்னதாக இந்திய அணி தமது முதலாவது இனிங்சிற்காக 334 ஓட்டங்களையும், தென்னாபிரிக்க அணி 500 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன்படி, இந்திய அணி, 8 விக்கட்டுக்கள் கைவசம் உள்ள நிலையில், 98 ஓட்டங்களால் பின்னிலையில் உள்ளது.

113 ஓட்டங்களினால் இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் பாகிஸ்தான் அணி 113 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்றுள்ளது.


இந்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்திருந்தது.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறையில் 5 விக்கெட்டுக்களை இழந்து 326 ஓட்டங்களை குவித்தது.


பெரு வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 44.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 213 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்துள்ளது.


ஐந்து ஒருநாள் போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் 2:1 என்ற அடிப்படையில் பாகிஸ்தான் அணி முன்னிலையில் உள்ளது.இரு அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் சர்வதேச போட்டு எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

 
mas template
Support : Gossip Tamil | GPT Template | GPT Template
Copyright © 2011. Gossip Tamil - All Rights Reserved
Template Created by Gossip Tamil Published by GPT Template
Proudly powered by Blogger