Headlines News :
GossiP Tamil. Powered by Blogger.

அழகு

Showing posts with label ரஜினி. Show all posts
Showing posts with label ரஜினி. Show all posts

சந்திரமுகி இரண்டாம் பாகம் , தயாரும் ரஜினி

ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா இணைந்து நடித்து 2005–ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய படம் 'சந்திரமுகி'. தமிழகத்தில் பல தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடியது. வசூலும் குவித்தது. இப்படத்தை பி.வாசு இயக்கினார்.


rajinikanth-154


தற்போது சந்திரமுகியின் 2–ம் பாகம் தயாராகுமா? என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது. இதற்கான கதையை பி.வாசு தயார் செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாயின.

ரஜினி நடித்த ‘கோச்சடையான்’ படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த படத்துக்கு பின் அடுத்து ரஜினி நடிக்கப் போகும் படம் எது என்று அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. கே.வி.அனந்த், அல்லது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிப்பார் என பேச்சு அடிபடுகிறது.

இந்த நிலையில் பி.வாசுவும், சந்திரமுகி படத்தின் 2–ம் பாகத்தை ரஜினியை வைத்து இயக்க ஆர்வம் காட்டுகிறார். இதுகுறித்து அவர் கூறும்போது ரஜினி நடித்தால் மட்டுமே சந்திரமுகி 2–ம் பாகத்தை தமிழில் இயக்குவேன். இல்லாவிட்டால் அப்படத்தை எடுக்க மாட்டேன் என்றார்.

சந்திரமுகி 2–ம் பாகத்தில் நடிப்பது குறித்து ரஜினி பரிசீலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கதையை கேட்டு விட்டு முடிவை அறிவிப்பார் என தெரிகிறது. டைரக்டர் பி. வாசு அழைப்பை ஏற்று சந்திரமுகி 2–ம் பாகத்தில் ரஜினி நடிப்பாரா? என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினியின் அடுத்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கதான் அதிக வாய்ப்பு...?

images (1)

ரஜினியின் அடுத்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கதான் அதிக வாய்ப்பு,கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கயிருந்த படம் ராணா. அதில் இந்தி நடிகை தீபிகா படுகோனேதான் நாயகியாக நடிக்க கமிட்டாகியிருந்தார். ஆனால், படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்ற சில தினங்களிலேயே ரஜினிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், தீவிர சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்று மறுபிறவி எடுத்து வந்தார்.


அப்போது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உடலுக்கு ஓய்வு தேவை. அதனால் ரிஸ்க்கான காட்சிகளில் நடிக்கக்கூடாது என்றெல்லாம் கண்டிசன் போட்டதால், அதையடுத்து மகள் செளந்தர்யா இயக்கத்தில் கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்தார். இரண்டு ஆண்டுகளாக வேலைகள் நடந்த அப்படம் இப்போது திரைக்கு வர தயாராகி விட்டது.


இந்த நிலையில், வழக்கம்போல் ரஜினியின் அடுத்த படம் குறித்த செய்திகள் கோலிவுட்டில் புகையத் தொடங்கியுள்ளது. இதற்கு முன்பு ரஜினியின் புதிய படத்தை ஷங்கர் அல்லது கே.வி.ஆனந்த் இயக்கலாம் என்று சொன்னவர்கள். இப்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கதான் அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.


ஏற்கனவே ரஜினியை வைத்து முத்து, படையப்பா என ஹிட் படங்களை கொடுத்தவர் என்பதோடு, இப்போது ரஜினியை அடிக்கடி சென்று சந்தித்து வரும் நபர் அவர் மட்டுமே. அதோடு தற்போது அவர் எந்த படத்தையும் இயக்கவில்லை. அதனால், கோச்சடையான் ரிலீசுக்குப்பிறகு ரஜினி நடிக்கும் படத்தை அவர் இயக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.


மேலும், புதிய படம் பற்றி அவர்கள் முடிவெடுத்து விட்டபோதும், கோச்சடையான் வெளியாகயிருக்கும் இந்த நேரத்தில் புதிய படம் பற்றி செய்தி வெளியிட்டால், கோச்சடையானுக்கான எதிர்பார்ப்பு குறைந்து விடும் என்பதற்காகவே தற்போதைக்கு அமைதி காத்து வருவதாகவும் செய்திகள் பரவிக்கொண்டிருக்கிறது.

ரஜினி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்....

rajinikanth-154


 

தமிழ் நாட்டை மட்டுமல்லாமல் உலகத்தில் உள்ள பல மக்களை தன் காந்த சக்தியால் கட்டி போட்டு வைத்திருக்கும் அந்த மந்திரச் சொல் தான் "ரஜினி". அவரைப் பற்றி சில தகவல்க உங்களுக்கு


1.ஜீஜாபாய் மற்றும் ராமோஜி ராவ் கெய்க்வாட் என்ற மஹாராஷ்ரிய தம்பதிகளுக்கு பிறந்த நான்காவது கடைக்குட்டி தான் 'சிவாஜி ராவ் கெய்க்வாட்' என்ற 'சூப்பர் ஸ்டார்'.

2.தன்னுடைய இளமை பருவத்தில் பல வேலைகளை செய்து வந்தார். கூலியாகவும். பேருந்தில் நடத்துனராகவும் பணியாற்றியுள்ளார். தன்னுடைய நண்பர் ராஜ் பகதூரின் தூண்டுதல் மற்றும் ஆதரவினால் தான் சென்னைக்கு நடிக்க வந்தார் ரஜினி.

3.எதிர்மறையான பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவர், மெல்ல குணச்சித்திர பாத்திரங்களில் நடித்தார். பின் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். பைரவி நேர படத்தில் நடிக்கும் போது அதன் தயாரிப்பாளர் தானுவால் அவருக்கு வைக்கப்பட்ட பட்டமே சூப்பர் ஸ்டார்.

4.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, பெங்காலி, ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். "ப்ளட் ஸ்டோன்" என்று இவர் நடித்த ஆங்கில படம் 1988 ஆம் ஆண்டு வெளிவந்தது.

5.கமல் ஹாசனுடன் சேர்ந்து 18 படங்கள் சேர்ந்து நடித்துள்ளார். அவைகளில் 16 படங்கள் 1975-1979 வரை வெளிவந்தவை.

6.ரஜினியை அறிமுகப்படுத்தியது பாலச்சந்தர் என்றாலும் கூட அவரை அதிகப்படங்களில் இயக்கியது எஸ்.பி.முத்துராமனே. ரஜினியை வைத்து அவர் இது வரை 25 படங்களை இயக்கியுள்ளார்.

7.ரஜினி, அமிதாப் பச்சனின் பல ஹிந்தி படங்களை ரீ-மேக் செய்து நடித்துள்ளார். பில்லா, தீ, படிக்காததவன், மிஸ்டர் பாரத், வேலைக்காரன், பாட்ஷா போன்ற படங்கள் இதில் அடங்கும்.

8.அவர் வள்ளி மற்றும் பாபா என இரு படங்களுக்கு கதை எழுதியுள்ளார். மேலும் மன்னன் மற்றும் வரப்போகும் கோச்சடையான் படங்களுக்காக தன் சொந்த குரலில் பாடலும் பாடியிருக்கிறார்.

9.அவருடைய ஒவ்வொரு படம் வெளிவந்த பின்பும் ஓய்வுக்காக இமயமலைக்கு செல்வது அவரின் பழக்கமாகும்.

10.ஸ்ரீ ராகவேந்திரர் அவருடைய நூறாவது படமாகும். படையப்பா அவருடைய நூற்றி ஐம்பதாவது படமாகும்.

11.அவர் நடித்த படங்களிலேயே அவருக்கு பிடித்த படம் 'முள்ளும் மலரும்'. அதை பார்த்து அவருடைய குருநாதர் திரு பாலசந்தர் அளித்த பாராட்டு கடிதத்தை இன்னமும் பத்திரமாக வைத்துள்ளார்.

12.ராக்கி பண்டிகையின் போது பௌர்ணமியன்று பாலச்சந்தரால் தான் சிவாஜி ராவ் என்ற நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாக மாறினார்.

13.ஆசியாவில் ஜாக்கி சானுக்கு அடுத்து அதிகப்படியாக சம்பளம் வாங்குபவர் நம் சூப்பர் ஸ்டாரே.

14.ஷூட்டிங்கின் இடைவேளையில் கேரவன் வண்டிக்குள் சென்று ஓய்வு எடுக்கும் பழக்கம் இல்லாதவர் ரஜினி. ஷூட்டிங் முடியும் வரை செட்டில் தான் இருப்பார். ஓய்வு எடுக்க வேண்டும் என்றால் செட்டிலேயே தலையில் ஒரு துண்டை போட்டு மூடி சற்று கண் அயர்வார்.

15.நீண்ட காலம் வரை பியட் மற்றும் அம்பாசடர் காரை மட்டுமே பயன்படுத்தி வந்தார். இப்போதும் கூட ஆடம்பர கார்களை பயன்படுத்தாத மிகவும் எளிய மனிதர்.

16.ஆன்மீகத்தில் அதிக நாட்டமுடையவர். ராகவேந்திரரின் பக்தரான இவர் பாபாஜியை வணங்குபவர். ஓய்வுக்கு இமையமலை செல்லும் இவர், அங்கே அனைவராலும் நுழைந்து விட முடியாத புகழ் பெற்ற பாபாஜி குகையில் தியானத்தில் ஈடுபடுவதுண்டு.

17.ஆன்மீகத்திற்கு அடுத்து அவர் அதிகமாக விரும்புவது சாதாரண மனிதனாக ஊர் சுற்றுவது. அவரை நகரின் சில பகுதியில் மாறு வேடத்தில் காண நேரிடலாம்

18.தன்னுடைய ப்ரைவசியை தொலைத்து விட்டதால் சில நேரங்களில் சிறையில் அடைபட்ட கைதியை போல் உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

19.தனக்கு மகளாகவும் ஜோடியாகவும் நடித்த ஒரே நடிகை மீனா மட்டுமே.

20.ரஜினியுடன் அதிகமாக ஜோடி சேர்ந்த நடிகை ஸ்ரீ ப்ரியா. 21. 2000-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டாருக்கு பத்ம பூஷன் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டார்.

21.இவர் முதன் முதலில் தயாரிப்பில் ஈடுபட்ட படம் மாவீரன். இதுவும் கூட அமிதாப் பச்சன் நடித்த ஹிந்தி படத்தின் ரீ-மேக்.

22.தன் படத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்துள்ளார் சூப்பர் ஸ்டார். அப்படி அவர் செய்தது பாபா மற்றும் குசேலன் ஆகிய படங்களுக்கு.

23.ரஜினிக்கு கருப்பு நிற உடைகளின் மீது ஆர்வம் அதிகம். ஆனால் சமீப காலமாக வெண்ணிற வேஷ்டி சட்டை மற்றும் காவி வேஷ்டியை அதிகமாக அணிகிறார்.

24.ஆன்மீகத்தில் தனக்கிருக்கும் ஈடுபாட்டை பற்றி அவர் இப்படி கூறியுள்ளார் - 'நான் ஆன்மிகவாதிதான். ஆனால், ஒரு கன்னத்தில் அறைந்தால், இன்னொரு கன்னத்தைக் காட்டும் அளவுக்கு ஆன்மிகத்தில் இன்னும் உயரவில்லை. அந்த மாதிரியான ஆன்மிகவாதியாக ஆவதற்கு எனக்கு விருப்பமும் இல்லை!'

தமிழ்ப்புத்தாண்டுக்கு ரஜினியும், விக்ரமும் மோதிக்கொள்ள அதிக வாய்ப்பு.....

08-kochadaiyaan343-600-jpg

பொங்கல் ஜல்லிக்கட்டில் குதிக்க வேண்டிய படம் ரஜினியின் கோச்சடையான். ஆனால், அதேநாளில் வீரம், ஜில்லா படங்கள் வெளியாவதால், தியேட்டர் பிரச்னை மட்டுமின்றி வசூல் பிரச்னையும் ஏற்படும் என்று பின்வாங்கி விட்டனர். இந்த நிலையில், ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ந்தேதி ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்துவதாக அறிவித்தவர்கள் இப்போது ஜனவரிக்கு மாற்றி விட்டார்களாம். அதோடு, தமிழ்ப்புத்தாண்டில் கோச்சடையானை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.
ஆனால், தமிழ்ப்புத்தாண்டில் பெரிய படங்கள் எதுவும் வெளியாகாது. அதனால் கோச்சடையான் சோலோவாக நின்று சொல்லியடிப்பார் என்று பார்த்தால், அங்கேயும் போட்டிக்கு ஷங்கரின் ஐ படம் அதிரடியாகத் தயாராகிக்கொண்டிருக்கிறதாம்.


vikram-karikalan
கடந்த ஒரு வருடமாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், விக்ரம் மாறுபட்ட கெட்டப்புகளில் நடித்து வரும் படம் ஐ. இதற்கு முன்பு ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த அந்நியன் படத்தை விடவும் இப்படம் மிக அதிரடியாக உருவாகியுள்ளதாம். அதனால் இப்படத்தின் மீது மிகுந்த ஆர்வத்துடன் உள்ளாராம் ஷங்கர்.
பொங்கலுக்கு விஜய்-அஜீத் மோதுகிறார்கள் என்றால், தமிழ்ப்புத்தாண்டுக்கு ரஜினியும், விக்ரமும் மோதிக்கொள்ள அதிக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகை குஷ்பு ஆவேசத்தின் உச்சி - ரஜினி பிறந்தநாள்னா ஏன் எங்கிட்ட வர்றீங்க?

download (2)


ரஜினியின் பிறந்தநாளுக்கு தமிழகம் முழுவதும் இருக்கிற அவரது ரசிகர்கள் ஆங்காங்கே வினைல் போர்டுகள் வைத்து இனிப்புகள் வழங்கி சந்தோஷத்தில் திளைக்க கிளம்பிவிட்டார்தகள்.


ஆனால் பத்திரிகை நிருபர்கள் சிலர் கடந்த ஒரு வாரமாக அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். ரஜினி சம்பந்தமாக யாரிடம் பேட்டி கேட்டாலும், இப்போ பிஸியா இருக்கேன் என்று கூறியே தப்பிக்கிறார்களாம். ரஜினியோடு ஜோடியாக நடித்த நடிகைகளை மட்டுமாவது தேடிப்பிடித்து பேட்டியெடுத்துவிடலாம் என்று அலைந்து திரிந்த ஒரு நிருபருக்கு நேர்ந்த கதி பரிதாபம்.


ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா, ராதிகா என்று பலரையும் தேடி தொலைபேசியில் பிடித்துவிட்டார் அவர். இரண்டு வரி ரஜினி சாரை பற்றி சொல்லுங்க என்று கேட்டதுதான் தாமதம். நான் பிஸியா இருக்கேன். நானே கூப்பிடுறேன் என்ற போனை கட் பண்ணியவர்கள்தானாம். அதற்கு பிறகு அவர்களாகவும் அழைக்கவில்லை. இவர் அழைத்தாலும் எடுக்கவில்லை. நடிகை குஷ்பு ஆவேசத்தின் உச்சிக்கே போய்விட்டாராம். ஏன் எப்ப ரஜினியை பற்றி நீங்க எழுத நினைச்சாலும் எனக்கு போன் அடிக்கிறீங்க? அவருக்கு பிறந்த நாள்னா கொண்டாடிட்டு போங்க. ஏன் என்னை தொந்தரவு பண்றீங்க என்று கேட்க, ஸாரி என்று போனை வைக்க வேண்டியதாயிற்று நிருபருக்கு.


சுஹாசினி கேட்ட கேள்வி நியாயமா, அநியாயமா என்று வாசகர்கள்தான் சொல்ல வேண்டும். என் பர்த்டேவுக்கு அவர்கிட்ட வாழ்த்து கேளுங்க. கொடுப்பாரா? பிறகு என்கிட்ட மட்டும் எதுக்கு கேட்கிறீங்க? ஆளை விடுங்க என்றாராம். சரி, யாருமேவா ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லவில்லை? சொன்னார்களே... ஜெயச்சித்ரா, அம்பிகா, ராதா, சீதா இவர்கள் மட்டும். மீனா கூட, பிறகு பேசுறீங்களா என்று போனை வைத்துவிட்டதாக தகவல்.


இப்படியொரு நிலைமையா ரஜினியின் இமேஜுக்கு?

 
mas template
Support : Gossip Tamil | GPT Template | GPT Template
Copyright © 2011. Gossip Tamil - All Rights Reserved
Template Created by Gossip Tamil Published by GPT Template
Proudly powered by Blogger