Headlines News :
GossiP Tamil. Powered by Blogger.

அழகு

Showing posts with label விஜய். Show all posts
Showing posts with label விஜய். Show all posts

சசிக்குமார் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார்

இயக்குனரும் நடிகருமான சசிக்குமார் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். சசிகுமார் இப்போதைக்கு பிரம்மன் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை கமல்ஹாசனின் உதவி இயக்குனர் சாக்ரட்டீஸ் இயக்கி வருகிறார்.

15659_thumb_665

இதன் பிறகு பாலா இயக்கும் படத்தில் கரகாட்டக்காரராக நடிக்கிறாராம் சசிகுமார். மதுரை பக்கத்தில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த கரகாட்ட குழு ஒன்றின் பின்னணியில் கதை அமைக்கப்பட்டிருக்கிறதாம்.

இந்தப் படத்தில் நடித்து முடித்தவுடன் 2015ல் விஜய்யை வைத்து புதிய படம் ஒன்றை சசிகுமார் இயக்கப் போகிறாராம். இது அவர் இயக்கும் மூன்றாவது படம். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

இந்த வருடம் நடிப்பில் கவனம் செலுத்தி அடுத்த ஆண்டில் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கவிருப்பதாக சசிகுமார் வட்டாரத்தில் இருந்து நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகின்றன.

முருகதாஸ் படத்தில் விஜய் கொல்கத்தா தாதாவாகிறார்...



ஜில்லா படம் முடிவடைந்த நிலையில் விஜய் இப்போது தன்னுடைய அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தின் கதை கொல்கத்தா நகரின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளதாம். மேலும் படத்தில் விஜய் தாதாவாக நடிக்கிறாராம்.


கொல்கத்தாவை கலக்கிக்கொண்டிருந்த பிரபல கிரிமினல் வேடம்தான் விஜய்க்கு. மக்களுக்கு நன்மை செய்யும் கிரிமினலாக விஜய் ராபின் ஹூட்டாக வருகிறாராம். உண்மைக் கதையை தழுவி எடுக்கப்படும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிப்பார் என்கிறார்கள்.


அனிருத் இசையமைப்பில் பாடல்கள் மதன்கார்க்கி எழுதுகிறார். வரும் பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கி தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளார்கள். ஏற்கெனவே விஜய்-முருகதாஸ் இணைந்த துப்பாக்கி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. துப்பாக்கி படத்தை மும்பை பின்னணியில் சொன்ன முருகதாஸ் இந்தப் படத்தை கொல்கத்தா பின்னணியில் சொல்லப் போகிறாராம்.


இதற்காக படப்பிடிப்புத் தளங்களைப் பார்வையிட ஏ.ஆர்.முருகதாஸ் தற்பொழுது கொல்கத்தாவில் முகாமிட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏ.ஆர்.முருகதாஸ் மட்டுமின்றி அவருடன் இசையமைப்பாளர் அனிருத், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோரும் கொல்கத்தாவில் படப்பிடிப்பிற்கான லொகேசன்களைத் தேர்வு செய்து வருவதாகக் கூறப்படுகிறது.



தான் நடிக்கும் படத்தில் பாடல்களை பாடி நல்ல வரவேற்பை பெற்று வரும் விஜய்....

thalapathy-vijay-stills-jilla-kd-tamil-movie-latest-stills

'ஜில்லா' படத்திற்காக மெலோடி பாடல் ஒன்றை ஸ்ரேயா கோஷலுடன் இணைந்து பாடியுள்ளார் விஜய்.ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் நேசன் இயக்கும் ஜில்லா திரைப்படம் பொங்கல் ஜல்லிக்கட்டில் களமிறங்க தயாராக உள்ளது.ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்திற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார்.



தான் நடிக்கும் படத்தில் பாடல்களை பாடி நல்ல வரவேற்பை பெற்று வரும் விஜய் ஜில்லாவுக்காக ‘கண்டாங்கி கண்டாங்கி’ என்ற மெலோடி பாடலை பாடியுள்ளார்.

இந்தப்பாடல் விஜய் ரசிகர்களுக்கு 2014ம் ஆண்டின் தித்திக்கும் சர்க்கரை பொங்கலாக இருக்கும்.



jilla-movie-first-look-stills-06
 
mas template
Support : Gossip Tamil | GPT Template | GPT Template
Copyright © 2011. Gossip Tamil - All Rights Reserved
Template Created by Gossip Tamil Published by GPT Template
Proudly powered by Blogger