Headlines News :
Home » » பி.டி.செல்வகுமார் தயாரிப்பில் விஜய் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது....

பி.டி.செல்வகுமார் தயாரிப்பில் விஜய் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது....

Written By Unknown on Monday, January 6, 2014 | 2:33 AM

ygvucf

விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், மற்றும் விஜய்க்கு பல வருடங்களாக உதவியாளராக இருப்பவர் பி.டி.செல்வகுமார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சென்னை வந்து பின்பு எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி அதன் பின் அவரது உதவியாளராக மாறியவர் பி.டி.செல்வகுமார். கடந்த ஆண்டு ஒன்பதுல குரு என்ற படத்தை டைரக்ட் செய்து இயக்குனராகவும் ஆனார்.


இப்போது தனது உதவியாளர் தயாரிப்பில் விஜய் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. தற்போது ரிலீசாக இருக்கும் ஜில்லாவுக்கு பிறகு விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இது முருகதாசின் சொந்தப் படம். அதற்கு பிறகு பி.டி.செல்வகுமார் தயாரிப்பில் அவர் நடிக்கலாம் என்கிறார்கள். பி.டி.செல்வகுமார் தன் நண்பர்கள் சிலருடன் இணைந்து விஜய் படத்தை தயாரிக்க முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது. தனது பிறந்த நாள் நிகழ்ச்சியில் பி.டி.செல்வகுமார் தயாரிப்பில் விஜய் நடிக்க இருக்கும் தகவலை ஜீவா தெரிவித்தார்.

இதுகுறித்து பி.டி.செல்வகுமார் கூறும்போது "அது தொடர்பான பேச்சு நடந்துகிட்டிருக்கு. முறையான, அதிகாரபூர்வமான அறிவிப்பை விஜய்யே வெளியிடுவார்" என்றார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி தன் வாழ்நாளில் தனக்கு உதவியவர்களுக்காக பாண்டியன், அருணாச்சலம் படங்களில் நடித்துக் கொடுத்ததைப்போல விஜய் தனக்கு உதவியவர்களுக்காக ஒரு படம் நடித்து கொடுக்க இருப்பதாகவும், அதில் அவரை வைத்து படம் எடுத்து இப்போது நலிந்த நிலையில் இருக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ஆகியோரை தயாரிப்பாளராக்கும் திட்டம் இருக்கிறது என்றும், அதில் உதவியாளர் பி.டி.செல்வகுமாரும் ஒருவர் என்றும் இன்னொரு தகவல் கசிந்திருக்கிறது.
Share this post :

Post a Comment

 
Support : Gossip Tamil | GPT Template | GPT Template
Copyright © 2011. Gossip Tamil - All Rights Reserved
Template Created by Gossip Tamil Published by GPT Template
Proudly powered by Blogger