Headlines News :
GossiP Tamil. Powered by Blogger.

அழகு

Showing posts with label திரையுலகம். Show all posts
Showing posts with label திரையுலகம். Show all posts

காக்கி சட்டை (2015) படத்தின் முன்னோட்டம் விமர்சனம்…!


வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா ஜோடி மீண்டும் காக்கி சட்டை படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் துரை செந்தில்குமார். படத்திற்கு இசையமைத்திருக்கிறார் அனிருத். காக்கி சட்டை படத்தை தனுஷ் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியானது. அதில், புழுதியைக் கிளப்பிக் கொண்டு வரும் ஜீப்பில் அடியாட்கள் சிலர் வருகிறார்கள்.

அந்த சாலையின் குறுக்கே சிவகார்த்திகேயன் தனது ராயல் என்பீல்ட் புல்லட்டில் ஒய்யாரமாக நின்று கொண்டிருக்கிறார். காக்கி பேன்ட் வெள்ளை சட்டையுடன் நிற்கும் சிவகார்த்திகேயனின் சட்டை சில இடி மின்னல்களுக்குப் பிறகு காக்கி சட்டையாக மெல்ல உருமாறுகிறது. அதுவரை சிரித்த முகத்துடன் நின்று கொண்டிருந்த சிவகார்த்திகேயனின் முகம் சட்டென சீரியஸ் முகமாக மாறுகிறது. ரசனையான கிராபிக்ஸ் வேலைகளில் ரொம்பவே ரசிக்க வைக்கிறது காக்கி சட்டை படத்தின் மோஷன் போஸ்டர்.


எமி ஜாக்ஸனின் நிர்வாணப் படம் வெளியானது

ஐ படத்தின் நாயகி எமி ஜாக்ஸனின் டாப்லெஸ் படங்கள் வெளியானதில் அதிர்ந்து போயுள்ளார் இயக்குநர் ஷங்கர். மதராசப்பட்டினம் மூலம் அறிமுகமானவர் இங்கிலாந்து நடிகை எமி ஜாக்சன் தொடர்ந்து அவர் தாண்டவம் படத்தில் நடித்தார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக ஐ படத்தில் நடித்து வருகிறார். அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் மாஸ் படத்திலும் நடிக்கிறார்.

நிர்வாணக் கோலத்தில் பிரபல தமிழ் நடிகை!

தமிழில் நடிகர் ஜெய் நடிப்பில் உருவான வாமனன் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி பின்பு சித்தார்த்துடன் 180 போன்ற சில படங்களில் நடித்தவர் நடிகை ப்ரியா ஆனந்த்.எப்போதுமே அந்தமாதிரி விசயங்களில்தான் இவரது பெயர் அடிபடுகிறது. சில காலங்களுக்கு முன்பு நீலப்படம் ஒன்றில் இவரைப்போலவே அச்சு அசல் ஒரு பெண் நடித்திருப்பதாக ஒரு செய்தி வெளியாகியது. ஆனால் அது தான் அல்ல வேறு யாரோ என்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில் தற்போது இன்னொரு சர்ச்சையான செய்தி வெளியாகியுள்ளது இவரைப்பற்றி. அதாவது ஒரு விளம்பரத்தில் முற்றும் துறந்து நிர்வாணமாக போஸ் கொடுக்கப் போகிறாராம்.

விலங்கு வதைக்கு எதிரான அமைப்பின் விளம்பரங்களில் விரைவில் ப்ரியா ஆனந்த் தோன்றப் போகிறாராம். பல பிரபலங்கள் உடம்பில் ஆடையணியாமல், விலங்குகளை வதைக்காதீர்கள் என்ற விளம்பர பட்டையை மட்டும் அணிந்தபடி போஸ் கொடுப்பார்கள். அப்படியென்றால் இவரும் அப்படித்தான் போஸ் கொடுக்கப்போகிறார் போலிருக்கிறது என்று இப்போதே கிசு கிசுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

மீண்டும் முருகதாஸுடன் இணையும் அஜீத் ?

தற்போது தமிழிலும் இந்தியிலும் முண்ணனி இயக்குநராக உள்ள ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய முதல் படம் தீனா. அப்படத்தில் அஜீத் மற்றும் சுரேஷ் கோபி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் பெரும் வெற்றிபெற்றதுடன் இப்படத்தில் இடம்பெற்ற வசனமான “தல” என்பது அஜீத்தின் அடையாளமாகவும் மாறிப்போனது. 

தற்போது விஜய்யை வைத்து கத்தி என்ற பெயரில் படம் எடுத்துக்கொண்டிருக்கும் முருகதாஸ் அடுத்து அஜீத்தை வைத்து படம் இயக்கப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. அஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அவரது அடுத்த படங்கள் குறித்து தகவல்கள் வெளிவராத காரணத்தால் முருகதாஸே அடுத்த படத்தை இயக்குவார் என்று கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஒரு வேளை அஜீத்தும் முருகதாஸும் மீண்டும் இணைந்தால் அப்படம் தீனா போன்று மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 

லிங்காவைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் எந்திரன் 2.. ?

தமிழ்த்திரைப்பட வரலாற்றிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படம் எந்திரன். ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி சிட்டி ரோபோவாகவும், வசீகரன் என்ற விஞ்ஞானியாகவும் இரட்டை வேடங்களில் இப்படத்தில் நடித்திருந்தார்.

ரஜினிக்கு ஜோடியாக இப்படத்தில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் பிளாக் பஸ்டர் ஹிட்டாகி, எந்திரன் படத்தின் வெற்றிக்கு பேருதவி புரிந்தன. மீண்டும் ஷங்கரும், ரஜினியும் இணைந்து தற்போது எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இருப்பதாக தகவல் அடிபடுகிறது.

விக்ரம் நடிப்பில் எடுக்கப்பட்ட ஐ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் தற்போது பிஸியாக இருக்கிறார் இயக்குநர் ஷங்கர். அதேபோல் கே.எஸ்.ரவிகுமாரின் இயக்கத்தில் லிங்கா படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி.

இந்த இரண்டு படங்களும் வெளியான பிறகு இவர்கள் மீண்டும் இணைகிற எந்திரன் 2 படம் தொடங்கப்படவிருக்கிறது. 240 கோடி செலவில் தயாராக உள்ள இப்படத்தை கல்பாத்தி அகோரம் மறுத்துவிட்டதால் தற்போது ஈராஸ் இன்டர்நேஷனல் இப்படத்தை தயாரிக்க முன் வந்திருக்கிறது.

மூச்சுத் திணறல், தீவிர சிகிச்சைப் பிரிவில் நடிகை மனோரமா

மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மனோரமாவுக்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகை மனோரமா மூச்சுத்திணறல் காரணமாக, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகை மனோரமாவுக்கு 2 ஆண்டுகளுக்கு முன் முழங்கால் அறுவைச் சிகிச்சை நடந்தது.

பின்னர் காளஹஸ்தி கோவிலுக்கு சென்றிருந்தபோது, குளியல் அறையில் தவறி விழுந்தார். அப்போது அவருடைய தலையில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். ஆனால் இந்த சம்பவத்துக்குப் பிறகு அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. கடந்த மார்ச் மாதம் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர், கடந்த மாதம் 26ந் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். 

இந்த நிலையில், தற்போது மீண்டும் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். மனோரமா உடல் நிலை ஆபத்தான கட்டத்தில் இல்லை என்றும், இன்னும் இரு தினங்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

லிங்காவில் முதல் முறையாக நவீன அதிவேக காமிரா

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் லிங்கா படத்தில் முதல் முறையாக அதிவேக காமிராவான பாந்தம் ப்ளக்ஸ் 4கே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்திய திரைப்பமொன்றில் இத்தகைய கேமிரா பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை. இந்த காமிராவை ஸ்டீரியோவிஷன் நிறுவனம் லிங்காவுக்கு வழங்கியுள்ளது. ரஜினி நடித்த ஸ்டன்ட் காட்சி ஒன்றை இந்தக் கேமராவைக் கொண்டு படமாக்கியிள்ளனர். ஹாலிவுட்டைச் சேர்ந்த ஸ்டன்ட் இயக்குநர் லீ விட்டேகர் அமைத்த ஒரு பெரிய சண்டைக்காட்சியை பாந்தம் ப்ளக்ஸ் கேமிராவில் படமாக்கினார் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு. இத்தகவலை ஸ்டீரியோயோவிஷன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கடவுள் இல்லைன்னு நான் எப்போ சொன்னேன்? - விவேக்

கடவுள் இல்லையென்று நான் எப்போதுமே சொன்னதில்லை. மூட நம்பிக்கைகளைத்தான் கிண்டலடித்து காமெடி செய்திருக்கிறேன், என்றார் நடிகர் விவேக். பல ஆண்டுகளாக முன்னணி நகைச்சுவை நடிகராகத் திகழும் விவேக், முதன்முறையாக கதாநாயகனாக, நடித்துள்ள படம் ‘நான்தான் பாலா'. இப்படத்தை இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக இருந்த ஆர்.கண்ணன் இயக்கியுள்ளார். 

விவேக் ஜோடியாக ஸ்வேதா என்ற புதுமுகம் நடிக்கிறார். படத்தில் விவேக் சீரியஸ் வேடத்தில் நடிப்பதால், காமெடி பொறுப்பை செல் முருகனும் மயில்சாமியும் ஏற்றுள்ளனர். இந்தப் படம் வரும் ஜூன் 13-ம் தேதி வெளியாகிறது. அதையொட்டி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் விவேக். அவர் அளித்த பேட்டி: நான்தான் பாலா ஒரு நேர்மையான, ஏழை பிராமணனின் கதை. கும்பகோணத்தில் பெருமாள் கோவில் பூசாரியான பாலா, வயதான தனது தாய், தந்தைக்காக அமெரிக்காவில் கிடைக்கும் பெரிய வேலையையும், திருமணத்தையும் தவிர்த்து வாழ்ந்து வருகிறான். காஞ்சிபுரத்தில் வசிக்கும் சௌராஷ்டிரா குடும்பத்தை சேர்ந்த நாயகி வைசாலிக்கும் பாலாவுக்கும் காதல். இவர்களுடைய காதலை புரிந்துகொண்ட, கூலிப்படையைச் சேர்ந்த பூச்சி இவர்களுக்கு திருமணம் செய்துவைக்க நினைக்கிறான். இவர்களுக்கு திருமணம் நடக்கப் போகும் தருவாயில் பூச்சி பற்றிய முழு விவரமும் பாலாவுக்கு தெரியவருகிறது.

இறுதியில் துளசி தீர்த்தமா? தெறிக்கும் ரத்தமா? என்பதுதான் க்ளைமாக்ஸ். இந்த கதையை கேட்ட இயக்குனர் பாலா, இந்த கதாபாத்திரத்திற்கு விவேக்தான் பொருத்தமாக இருப்பார் என்று இயக்குனர் கண்ணனிடம் பரிந்துரைத்திருக்கிறார். நான் ஆரம்பத்தில் நடிக்க மறுத்து வந்தேன். ஆனால் இரண்டரை ஆண்டுகள் அவரும் காத்திருந்தார். இப்போதான் ரசிகர்கள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிற பக்குவத்திற்கு வந்து விட்டார்களே... எனவே நடிக்க ஒப்புக் கொண்டேன். 

இயக்குனர் கண்ணன் தனது குருநாதர் பாலா மீதுள்ள பக்தியினாலேயே இப்படத்திற்கு ‘நான்தான் பாலா' என்ற பெயரை வைத்திருக்கிறார். தமிழ் சினிமா வரலாற்றிலேயே சௌராஷ்டிரா சமூகத்தை பற்றியும், அந்த மொழியையும் இந்த படத்தில் முதன்முதலாக பதிவு செய்துள்ளோம். சௌராஷ்டிரா மொழி பேசி திறம்பட நடித்துள்ளார் நாயகி ஸ்வேதா. இந்தப் படத்துக்குப் பிறகு தனியாவே காமெடி பண்ணலாம் செல் முருகன். அந்த அளவு சிரிக்க வச்சிருக்காரு இந்தப் படத்தில்," என்றார் விவேக். 

அவரிடம் கேட்கப்பட்ட சில கேள்விகள்: 

பொதுவாக உங்கள் படங்களில் கடவுள் மறுப்பு அல்லது பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகளை மையப்படுத்தி காமெடி பண்ணுவீர்கள். ஆனால் இப்போது ஆத்திக பிராமணராக நடிப்பது பற்றி? 
என்னுடைய படங்களில் நான் எப்போதும் கடவுள் இல்லை என்று சொன்னது கிடையாது. நானும் கடவுளை கும்பிடுகிறவன்தான். கடவுள் பெயரால் மக்களை ஏமாற்றுவதைத்தான் வேண்டாம் என்று என்னுடைய படங்களில் நகைச்சுவையாக பதிவு செய்திருப்பேன். மூட நம்பிக்கைகளைத்தான் நான் கிண்டலடித்திருக்கிறேன். 

பிராமணர்களுக்கு ஆதரவான பிரச்சாரமா இந்தப் படம்? 
அப்படியெல்லாம் இல்லை. இது ஒரு கதை. பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை மையப்படுத்தி வருகிறது. அவ்வளவுதான். நான் பிராமணனாக நடிப்பது முதல் முறையுமல்ல. ஏற்கெனவே சில படங்களில் நடித்திருக்கிறேன். 

காமெடியன்கள் எல்லோரும் ஹீரோவாகிட்டீங்களே.. அப்புறம் யார்தான் காமெடி செய்வது? 
நான் ஒண்ணும் இந்தப் படத்துக்குப் பிறகு காமெடியே பண்ண மாட்டேன்னு சொல்ல மாட்டேன். என்னை மாதிரி எல்லோருக்குமே ஹீரோவா பண்ணனும்னு ஒரு ஆசை இருக்கும். இந்தப் படம் அதை நிறைவேத்தியிருக்கு. மத்தபடி, நான் இப்போதும் எல்லோர் கூடவும் காமெடி வேடங்கள்ல நடிச்சிக்கிட்டுதான் இருக்கேன்.

வயதாகியும் இன்னும் கவர்ச்சியில் சொக்க வைக்கும் ஐஸ்வர்யா...!

சமீபத்தில் நடந்த கேன்ஸ் விழாவிற்கு இந்திய நடிகையான ஐஸ்வர்யா ராய் பச்சன் சென்று, இரண்டு நாட்கள் அட்டகாசமான ராபர்டோ கவாலி உடையில் வந்து அசத்தினார். அந்த இரண்டு உடைகளிலும் கவர்ச்சி குறைவாகத் தான் இருந்தது. ஆனால் கேன்ஸ் விழாவை முடித்துவிட்டு, இந்தியா திரும்புவதற்காக ஐஸ்வர்யா ராய் விமான நிலையத்திற்கு உடுத்தி சென்ற ஆடையைப் பார்த்தால், "ஏன் இப்படி?" என்று தான் கேட்கத் தோன்றும்.

கொஞ்சம் 'மேக்கப்' ஓவரா இருந்தாலும், ஜில்லுன்னு வந்த ஐஸ்வர்யா! ஏனெனில் ஐஸ்வர்யா ராய் விமான நிலையத்திற்கு செல்லும் போது, மிகவும் டீப் நெக் கொண்ட, அவரது மார்பகங்கள் தெரியுமாறான உடையை உடுத்திச் சென்றார். இங்கு 2014 கேன்ஸ் முடிந்து விமான நிலையத்திற்கு செல்லும் போது ஐஸ்வர்யா ராய் பச்சன் மேற்கொண்ட ஸ்டைல் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இது ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் திரைப்பட விழாவை முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வந்த போது எடுத்தது.


விமான நிலையத்திற்கு மிகவும் ஸ்டைலான கருப்பு நிற டீப் நெக் கொண்ட உடையை அணிந்து வந்தார். இதனால் அவரது மார்பகங்கள் நன்கு வெளிப்பட்டன.



இது ஐஸ்வர்யா தனது மகள் ஆராத்யா மற்றம் தாய் பிருந்தா ராயுடன் விமான நிலையத்திற்கு வந்த போது எடுத்தது.

இது கேன்ஸின் ஆம்ஃபர் கலாவில் கணவர் அபிஷேக் பச்சனுடன் சேர்ந்து கொடுத்த போஸ்.

ஆண்டு கேன்ஸில் முதன் முறையாக செல்லும் போது கோல்டன் நிற மெர்மெய்டு கவுன் அணிந்து வந்தார். இது ஸ்ட்ராப்லெஸ் என்பதால், அவர் சற்று குனிந்தாலும், அனைத்தும் தெரியும். அந்த அளவிலான உடையை தேர்ந்தெடுத்து அணிந்து வந்தார்.

கேன்ஸில் இரண்டாம் முறையாக பங்கு கொள்ளும் போது, ஸ்லீவ்லெஸ் டீப் நெக் கொண்டு வெள்ளை நிற கவுனை அணிந்து வந்தார். இதில் இவர் மிகவும் க்யூட்டாக, பழைய ஐஸ் மாதிரியே இருந்தார்.

கேரவேனில் வரலட்சுமியுடன் விஷால்; கதவை தட்ட பயப்படும் உதவி இயக்குநர்கள்

சீசிஎல் நடக்கும்போது எப்ப பார்த்தாலும் விஷாலுடன் சுற்றிக் கொண்டிருந்த வரலட்சுமி தற்போது விஷாலின் படப்பிடிப்பு எங்கு நடந்தாலும் அங்கு பறந்துவிடுகிறாராம். மதகதராஜா படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர் பின் அப்படப்பிடிப்பு முடிந்து பல மாதங்கள் ஆகியும் இவர்களின் இந்த ஒட்டல் உரசல் இன்னும் நிற்கவே இல்லையாம்.

பொள்ளாச்சியில் ஹரியின் இயக்கத்தில் விஷால் – ஸ்ருதிஹாசன் இணைந்து நடிக்கும் பூஜை படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. எப்போதுமே ஹரியின் படம் எடுத்த வேகத்திலே முடித்துவிடுவார். தயாரிப்பாளருக்கு அதிக செலவு வைக்காமல் இப்படி படத்தை முடிப்பதால் கோடம்பாக்கத்தில் ஒரு ஆரோக்யமான பெயரும் வாங்கியிருக்கிறார் ஹரி. ஆனால் தற்போது பூஜை படத்தின் படப்பிடிப்பு மிகவும் மந்தமாக நடக்கிறதாம். காரணம் வரலட்சுமிதான் என்று கோரஸ்சாக கத்துகிறார்கள் ஹரியின் உதவி இயக்குநர்கள். ஒரு ஷாட் முடிஞ்சதும் விஷால் கேரவேன்குள்ள போயிட்றாரு. அடுத்த ஷாட் ரெடியாகி ஹிரோவை அழைக்க செல்லும் உதவி இயக்குநர்கள் விஷாலின் கேரவேன் கதவை தட்டவே தயங்குகிறார்களாம். அவரே வெளியில் வரும் வரை காத்திருந்து அழைத்துச் செல்கிறார்களாம் இதனால் செம கடுப்பில் இருக்கிறாராம் ஹரி… போற போக்கை பார்த்தால் கேரவேன் செலவையும் கட் செய்துவிடுவார் போலிருக்கே…

ஆனந்தி சினிமா நடிகையானார்

சீரியல்களில் நடித்து வந்த ஆனந்தி, விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் சீசன் 7 நடன நிகழ்ச்சியில் தனது சூப்பரான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தார்.

அதுவும் சோலோ ரவுண்டில் அவர் ஆடிய பெல்லி டான்ஸ் யூ டியூப்பில் லைக்குகளை அள்ளுகிறது. ஆட்டம் தந்த புகழால் இப்போது சினிமா நடிகையாகிவிட்டார்.

மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆர்யா, ஹன்சிகா நடிக்கும் மீகாமன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் இன்னும் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இதுபற்றி ஆனந்தி கூறியதாவது: சின்ன வயசிலிருந்தே நடனம்தான் எனக்கு உயிர். ஆனாலும் முதலில் சின்னத்திரையில் நடிக்கத்தான் வாய்ப்பு கிடைத்தது. சீசன் 7ல் ஆட ஆரம்பித்தபிறகு என் வாழ்க்கையே திசை மாறிவிட்டது.

எனது ஆட்டத்தை பார்த்துவிட்டு வெளிநாடுகளில் இருந்தெல்லாம் எப்படியோ என் போன் நம்பரை பிடித்து பாராட்டி பேசினார்கள். இயக்குனர் மகிழ்திருமேனியும் எனது நிகழ்ச்சியை பார்த்துவிட்டு நடிக்க அழைத்தார்.

மீகாமன் படத்தில் ஹன்சிகாவுக்கு அடுத்து முக்கியமான கேரக்டர். இப்போது நிறைய வாய்ப்புகள் வருகிறது. அதனால் இனி சீரியல்களில் நடிக்க மாட்டேன். சீசன் 7ல் மட்டும் ஆடுவேன். மற்றபடி இனி சினிமாவுக்குத்தான் முக்கியத்துவம். என்கிறார் ஆனந்தி.

ஆண் கர்ப்பமாக நடிக்கும் ‘கர்ப்பஸ்ரீமான்’ மலையாளப் படம்…!

வித்தியாசமான படங்களையும், கதைகளையும், கதாபாத்திரங்களையும் உருவாக்குவதில் இந்திய அளவில் சிறந்த கலைஞர்களைக் கொண்ட திரையுலகம் மலையாளத் திரையுலகம் மட்டுமே. குறைந்த செலவில் அவர்கள் எடுக்கும் படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

ஹீரோக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் , கதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருபவர்கள் மலையாளத் திரையுலகினர். அவர்களது அடுத்த ஒரு வித்தியாசமான படைப்பு ‘கர்ப்பஸ்ரீமான்’. ஒரு ஆண் கர்ப்பமடைவதை இந்த படத்தில் நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்களாம்.

பிரபல மலையாள நகைச்சுவை நடிகரான சூரஜ் வெஞ்சாரமூடு இந்த படத்தில் கர்ப்பமான ஆண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை அனில் கோபிநாத் என்பவர் இயக்குகிறார்.

மனோஜ் கே. ஜெயன், ஷம்மி திலகன், நெடுமுடி வேணு மற்றும் பலர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். கிராமத்துப் பின்னணியில் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். புராணங்களிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு விஷயத்தை முன்மாதிரியாகக் கொண்டு இந்த படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார்களாம்.

அதே சமயம், இந்த படத்தின் திரைக்கதை விவகாரம் தொடர்பாக வழக்கு ஒன்று தொடரப்பட்டு அதற்கு சில நாட்களுக்கு முன்தான் தீர்ப்பு கிடைத்திருக்கிறது. படத்தின் ஒரிஜனல் திரைக்கதை வைத்திருப்பவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கொடுத்து விட்டு , படத்தைத் திரையிட தயாரிப்பாளருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

1994ம் ஆண்டு ஹாலிவுட்டில் ஆர்னால்ட் ஸ்காவேஸ்நேகர் இப்படி கர்ப்பமடைந்த ஆணாக நடித்து ‘ஜுனியர்’ என்ற படம் வெளிவந்தது. இப்படத்தின் தழுவல்தான் ‘கர்ப்பஸ்ரீமான்’ என மல்லுவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.

சன்னி லியோனுடன் ஜெய் தொடர்பு

சன்னி லியோனுடன் தொடர்பில் இருக்கிறார் ஜெய்.பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் முதன் முறையாக தமிழில் ‘வடகறி என்ற படத்தில் ஹீரோ ஜெய்யுடன் குத்தாட்டம் ஆடி இருக்கிறார். சமீபத்தில் கோடம்பாக்கம் வந்த சன்னி லியோன் பாடலுக்கு ஆடிவிட்டு சென்றார். சன்னியுடன் நெருக்கமாக ஆட்டம் போட்ட ஜெய், அவருடன் புகைப்படங்கள் எடுத்து கொண்டதுடன் அவரது நடனத்தை பாராட்டி தள்ளினார்.


பிறகு மும்பை புறப்பட்டு சென்ற சன்னி சமீபத்தில் தனது பிறந்த தினத்தை கொண்டாடினார். அவரது பிறந்த நாளை ஞாபகம் வைத்து கொண்டு மறக்காமல் போன் செய்து வாழ்த்து தெரிவித்தார் ஜெய். அதற்கு பதில் அளித்த சன்னி, ‘உங்களுடன் இணைந்து நடனம் ஆடிய பாடல் என் மனதில் அப்படியே பதிந்திருக்கிறது. அதன் வரிகளை தினமும் நான் முணுமுணுத்து கொண்டிருக்கிறேன். பாடல் எப்படி வந்திருக்கிறது என்பதை பார்க்கவும் ஆவலாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.


தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறை 6 மாதங்களில் 100 படங்கள் ரிலீஸ்

இந்த ஆண்டில் ஜூன் மாதம் முடியும்போது 100 படங்கள் தமிழில் ரிலீஸ் ஆகிவிடும். தமிழ் சினிமா வரலாற்றில் இது புது சாதனையாகும். கடந்த சில வருடங்களை மிஞ்சும் அளவுக்கு இந்த ஆண்டு தமிழ் படங்களின் வரத்து மின்னல் வேகத்தில் இருக்கிறது. கோச்சடையான், ஜில்லா, வீரம் போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் தவிர சிறு மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்கள் என 85 படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இம்மாதம் மஞ்சப்பை, முண்டாசுப்பட்டி, மெல்லிசை, நான்தான் பாலா, அரிமா நம்பி, பூலோகம், ஜிகர்தண்டா, சைவம், திருமணம் எனும் நிக்காஹ், அரண்மனை உள்ளிட்ட மேலும் 15 படங்கள் வெளியாக உள்ளதாக தெரியவருகிறது. தியேட்டர்கள் பற்றாக்குறை மேலும் சில காரணங்களால் கடந்த மாதங்களில் சில படங்கள் வெளிவராமல் தள்ளிப்போனது. அதுபோல் பிரச்னை எதுவும் இல்லாவிட்டால் இம்மாதத்தில் 15 படங்கள் வெளியாக வாய்ப்புள்ளது. 

இது ஜூன் மாதம் முடிவில் 100 படங்கள் ரிலீஸ் என்ற எண்ணிக்கையை பூர்த்தி செய்யும் என்று ஒரு திரைப்பட வினியோகஸ்தர் தெரிவித்தார். இதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் ஆறே மாதங்களில் 100 படங்கள் ரிலீஸ் என்ற சூழல் ஏற்பட்டதில்லை. வழக்கமாக ஒரு ஆண்டுக்கு 120 முதல் 140 படங்கள் வரை ரிலீசாகும். கடந்த ஆண்டு அதிகபட்சமாக 170க்கு அதிகமான படங்கள் வெளிவந்தன. அதையெல்லாம் மிஞ்சும் வகையில் இப்போது ஆறு மாதங்களிலே தமிழ் சின¤மா செஞ்சுரி அடிக்க உள்ளது.

CFDA விருதுகள் 2014, ரிஹானாவின் ஆடை தூள் மச்சி மச்சி ...!

நியூயார்க்கில் ஆண்டுதோறும் சிறந்த ஆடைவடிவமைப்புக்காக CFDA என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நியூயார்க் நகரில் நேன்றுக் காலை நடந்து முடிந்தது. இதில் தன்னுடைய முன்னழகையும், பின்னழகையும் பாருங்கள்! பாருங்கள்! என்று பாப் பாடகி ரிஹானா அணிந்து வந்த ஆடை ஹாலிவுட் உலகத்தையே வாயைப் பிளக்க வைத்துள்ளது.

ஆடம் ஷெல்மேன் என்ற ஆடை வடிவமைப்பாளர் உருவாக்கிய இந்த வைரம் பதித்த ஆடை ரிஹானாவின் அழகை பார்வையாளர்கள் பருக கங்கணம் கட்டிக்கொண்டு வடிவமைக்கப்பட்டதுபோல் உள்ளது. இதை அணிந்துகொண்டு அவர் சிகப்பு கம்பளத்தில் நடந்து வருகையில் எல்லோருடைய கண்களும் ரிஹானாவையே மொய்த்துக்கொண்டிருந்தன. CFDA வரலாற்றில் அழிக்க முடியாமல் இடம்பெற்றுவிட்ட ரிஹானாவின் இந்த ஆடையை பார்த்தவர் யாரும் தன் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டார். அதிலும் மறைக்க வேண்டிய முக்கிய இடத்தைக்கூட மெல்லிய துணியை கொண்டு மூடி ஆடை வடிவமைப்பு உலகில் பெரும் பரபரப்பையே ஏற்படுத்தியுள்ளார் வடிவமைப்பாளர் ஆடம் ஷெல்மேன்.

ரிஹானாவின் ஆடைக்கேற்ப கச்சிதமாக அமைந்திருக்கும் ஹெட்ஸ்கார்ப்பும், கையுறைகளும் 216,000 ஸ்வரோவ்ஸ்கி க்ரிஸ்டல்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல பின்னழகை மேலும் தூக்கிக் காட்டும் ஹீல்ஸ் ஷூக்களுடன் ஒய்யாரமாக பார்வையாளர்களை நோக்கி கையசைத்த ரிஹானா ஒரு தேவதையாகவே எல்லோருக்கும் காட்சி தந்தார். CFDA 2014-ஆம் ஆண்டு விருது வழங்கும் விழாவில் ரிஹானா அணிந்து வந்த வைரம் பதித்த அந்த ஆடையை பார்ப்போம் வாருங்கள்

வைரமாய் மின்னிய ரிஹானா



'Shine Bright Like A Diamond' என்ற தன்னுடைய பாடல் வரிகளுக்கு ஏற்ப ரிஹானா, ஆடம் ஷெல்மேன் வடிவமைத்த வைரம் பதித்த ஆடையில் கண்கள் கூச மின்னியதை உங்களின் கற்பனைக்கே விட்டுவிடுகிறோம். இந்த வைரம் பதித்த ஆடை ரிஹானாவின் முன்னழகை முன்னணியில் கொண்டு வந்து நிறுத்தி, எல்லோரையும் கண்கள் விரிய செய்துவிட்டது.

பக்கவாட்டில் பஞ்சர் ஆனவர்கள்


பக்கவாட்டில் பஞ்சர் ஆனவர்கள்! ரிஹானாவை பக்கவாட்டில் பார்த்தவர்கள் அப்படியே பஞ்சர் ஆகிப் போய் விட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு மூடியும், மூடாமலும் இருந்த பக்கங்கள் (பாகங்கள்), ஏராளமான பேரின் ஜொள்ளுக்கு காரணமாகிவிட்டது.

216,000 க்ரிஸ்டல்கள்



ரிஹானாவின் ஆடைக்கேற்ப கச்சிதமாக அமைந்திருக்கும் ஹெட்ஸ்கார்ப்பும், கையுறைகளும் 216,000 ஸ்வரோவ்ஸ்கி க்ரிஸ்டல்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ஏங்கவைத்த பின்னழகு



ஆடம் ஷெல்மேன் வடிவமைத்த இந்த ஆடையின் சிறப்பம்சமே ரிஹானா ஏங்க வைக்கும் பின்னழகை அட்டகாசமாக காட்டுவதுதான். இதைப் பார்த்தவர்கள் எத்தனை பேர் ஏங்கித் தவிக்கிறார்களோ?

ரிஹானாவின் ஷாலாக இருக்கக்கூடாதா ?




ரிஹானாவின் கைகளில் விலங்கின் மெல்லிய மயிர்கொண்டு செய்யப்பட்ட மிருதுவான ஷால் ஒன்று பாம்புபோல் சுற்றிக்கொண்டு கிடந்தது. அந்த ஷாலாக இருக்கக்கூடாதா என்று நிறைய பேர் ஏக்க பெருமூச்சி விட்டனர்.

இதுவொன்றும் புதிதல்ல



ரிஹானாவுக்கு இதுபோன்ற விஷயம் ஒன்றும் புதிதல்ல. அவர் ஏற்கனவே பலமுறை அரைகுறை ஆடையுடன் வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.  இதோ நீங்களே பாருங்கள்.

தங்கக் காலணிகள்



பின்னழகை மேலும் தூக்கிக் காட்டும் ஹீல்ஸ் ஷூக்களுடன் ஒய்யாரமாக பார்வையாளர்களை நோக்கி கையசைத்த ரிஹானா ஒரு தேவதையாகவே எல்லோருக்கும் காட்சி தந்தார்.

ரிஹானாவின் வைரங்கள்



ஆடம் ஷெல்மேன் வடிவமைத்த இந்த சர்ச்சைக்குரிய ஆடை மட்டுமல்ல, ஜேக்கப் மற்றும் பால் மோரெல்லி ஆகியோர் வடிவமைத்திருந்த மோதிரமும், காதணிகளும் என எல்லாமே வைரம்தான் (ரிஹானாவையும் சேர்த்து).

ஆகஸ்ட் 15ல் அஞ்சான் வெளியீடு லிங்குசாமி உறுதி

லிங்குசாமியின் இயக்கத்தில் சூர்யா, சமந்தா மற்றும் பலர் நடித்து வரும் படம் அஞ்சான். இப்படத்தின் படப்பிடிப்பு அதாடர்ந்து வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படம் வருகிற ஆகஸ்டு 15ம் தேதி திரையில் ரிலீசாகும் என்று இப்படத்தின் இயக்குநர் லிங்குசாமி தெரிவித்தள்ளார். 



மேலும் அவர் கூறுகையில் “ஒரு பாடல் காட்சி தவிர அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டன. இப்பாடல் காட்சியை கோவாவில் படமாக்க உள்ளோம். இப்பாடல் இவ்வருடத்தின் மிகப்பெரிய காதல் பாடலாக இருக்கும். இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா இப்படத்திற்கு மிகவும் சிறப்பாக இசையமைத்துள்ளார். அடுத்த மாதம் இசை வெளியீட்டுடன் சேர்ந்து இப்படத்தின் டிரைலரும் வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.

சகல பாதுகாப்பு வசதிகளுடன் மும்பையில் புதுவீடு வாங்கிய ஸ்ருதி

கல பாதுகாப்பு வசகளுடன் கூடிய புதிய வீட்டை மும்பையில் வாங்கி குடியேறினார் நடிகை ஸ்ருதிஹாஸன். தமிழ், தெலுங்கு, இந்தியில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ஸ்ருதிஹாஸன், கடந்த ஆண்டு வரை மும்பையில் வாடகை வீட்டில் தங்கி இருந்தார். சில மாதங்களுக்கு முன் ஸ்ருதிஹாசன் அவரது ரசிகன் என்று கூறிக் கொண்டு வந்த ஒருவர் திடீரென தாக்கினார். ஸ்ருதி ஹாஸன் அதிர்ஷ்டவசமாக அதிலிருந்து தப்பினார். பிறகு போலீசார் தாக்கியவனை அடையாளம் கண்டு கைது செய்தனர். 



இந்த சம்பவத்தை தொடர்ந்து சில நாட்கள் தோழி வீட்டில் தங்கி இருந்தார். பிறகு பலத்த பாதுகாப்புடன் வாடகை வீட்டுக்கே திரும்பி சென்றார். இருந்தாலும் சொந்தமாக வீடு வாங்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார். மும்பை அந்தேரி பகுதியில் இரண்டு படுக்கை அறையுடன் அவருக்கு பிடித்த வகையில் ஒரு வீடு கிடைக்க, அதை உடனடியாக பேசி முடித்து, குடி புகுந்துவிட்டார். இந்த வீட்டுக்குப் பக்கத்து வீடுகளில் நடிகர் இம்தியாஸ் அலி, நடிகை பிராச்சி தேசாய் போன்ற சினிமா பிரபலங்கள் வசிப்பதால், பயமின்றி இருக்கலாம் என நினைத்து குடிவந்திருக்கிறாராம். இருந்தாலும் பாதுகாப்புக்கு இரு காவலாளிகளை நியமித்துள்ளாராம் ஸ்ருதி.

உள்ளாடை அணிவதை விரும்பாத நடிகை, திரையுலகில் பரபரப்பு

பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகள் மஞ்சுலட்சுமி, ஃபேஸ்புக்கில் பதிவு செய்த ஒரு ஸ்டேட்டஸ் தெலுங்கு படவுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தான் பதிவு செய்த ஸ்டேட்டஸ் ஒரு ஜோக்தான் என்றும், அதை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அறிவித்திருந்தும், அவர் மீது தெலுங்கு படவுலகம் வெறுப்பு காட்டி வருகிறது.


நேற்று நடிகை மஞ்சுலட்சுமி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “இன்று முதல் நான் உள்ளாடை அணிவதை நிறுத்தப்போகிறேன்” என்று பதிவு செய்தார். இந்த ஸ்டேட்டஸை பார்த்த அவருடைய நண்பர்கள் பலர், உண்மையிலேயே இந்த பதிவை நீங்கள்தான் பதிவு செய்தார்களீர்களா அல்லது யாரேனும் உங்கள் கணக்கை ஹேக் செய்து பதிவு செய்துள்ளார்களா? என போன் செய்து கேட்டபோது, ‘நானே இந்த பதிவை பதிவு செய்தேன். இது ஒரு ஜோக்தான் இதையாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார்.
மஞ்சுலட்சுமிமியின் பேஸ்புக் பதிவிற்கு தெலுங்கு படவுலகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களை ஒரு நடிகை இப்படி அசிங்கப்படுத்தியைதை இதற்கு முன் தான் பார்த்ததில்லை என்று பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் கமெண்ட் அடித்துள்ளர். இவர் ஏற்கனவே மஞ்சுலட்சுமிக்கு ஜோடியாக சமீபத்தில் வெளியான திரைப்படம் ஒன்றில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ரஜினி கமல் ஜோடி சேர்கின்றனர் ?

தமிழ் சினிமாவின் இரண்டு ஜாம்பவான்களாக இருக்கும் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் கடைசியாக இணைந்து நடித்த படம் நினைத்தாலே இனிக்கும். இந்த திரைப்படம் கடந்த 1979ஆம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்தது. இந்த படத்திற்கு பின்னர் இருவரும் சேர்ந்து பேசி, தனித்தனியாக படம் நடிப்பது என்றும், இருவரும் சேர்ந்து நடிப்பதில்லை என்றும் முடிவு செய்தனர். 



தற்போது 35 வருடங்கள் கழித்து மீண்டும் அதே கே.பாலசந்தரின் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கே.பாலசந்தர் இந்த படத்திற்கான திரைக்கதையையும் முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார்
.
ரஜினியின் லிங்கா, மற்றும் கமல்ஹாசனின் உத்தம வில்லன் ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்பு முடிந்தபின்னர் இந்த படத்தை வரும் 2015ல் தொடங்க கே.பாலசந்தர் முடிவு செய்துள்ளார். அவரது கவிதாலயா நிறுவனமே இந்த படத்தை தயாரிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

செல்போனில் பரவுது கரீனாவின் நிர்வாண வீடியோ ...!



இந்தி நடிகை கரீனா கபூர், படப்பிடிப்புத் தளத்தின் ஓய்வறையில் உடை மாற்றுவதை ரகசிய கேமரா மூலம் படம் பிடித்து செல்போன்களில் வீடியோ பைலாக வெளியிட்டுள்ளது ஒரு கும்பல். இந்த எம்எம்எஸ் வீடியோ பைல், மிக வேகமாக செல்போன்களில் பரவி வருகிறது. இதனால் பாலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னணிக் கதாநாயகிகளில் ஒருவர் கரீனா கபூர். கடந்த சில மாதங்களுக்கு முன் சக நடிகர் ஷாகிதுடன் உதட்டோடு உதடு சேர்த்து முத்தத்தில் முக்குளித்த காட்சியை யாரோ படம் பிடித்துத் தொலைக்காட்சிகளுக்கும் மும்பையில் இருந்து வெளியாகும் மிட்டே இதழுக்கும் வழங்கினர். இதையடுத்து அந்தப் பத்திரிக்கை மீது வழக்குத் தொடுத்தார் கரீனா. இந் நிலையில் மீண்டும் கரீனாவின் 'அந்த' படங்கள், செல்பேசியில் வெளிவரத் தொடங்கியுள்ளன.

அந்த வீடியோ காட்சியில் என்ன உள்ளது? படப்பிடிப்புத் தளத்தில் உள்ள ஓய்வு அறையில் நுழையும் கரீனா தனது உடைகளைக் களைகிறார். அப்படியே திரும்பிப் பார்க்கும் அவரது முக பாவம் வேகமாக மாறுகிறது. யாரோ தன்னைச் சாவித் துவாரம் வழியாகப் படம் பிடிப்பதை உணரும் கரீனா, உடைகளை அள்ளி மேலே போடுகிறார்.

இவ்வாறாக 30 வினாடிகள் ஓடும் அந்த வீடியோ பைல், இப்போது செல்போனில் படு வேகமாகப் பரவி வருகிறது. வீடியோ காட்சிகளை அனுப்ப வல்ல தொலைபேசிகளின் விலை குறைந்திருப்பதால் பலரிடமும் இது உள்ளது. எனவே காட்டுத் தீப்போல இது பரவி வருகிறது.

இதனால் மும்பை பட உலகம் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது. எந்தப் படப்பிடிப்புக் களத்தில் இந்தச் சம்பவம் நடந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. படப்பிடிப்புக் களத்தில் உடைமாற்றும் போது தங்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்று நடிகைகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


 
mas template
Support : Gossip Tamil | GPT Template | GPT Template
Copyright © 2011. Gossip Tamil - All Rights Reserved
Template Created by Gossip Tamil Published by GPT Template
Proudly powered by Blogger