Headlines News :
Home » » பார்முலா-1 கார் பந்தயம்: 7-வது சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் டேனியல் வெற்றி

பார்முலா-1 கார் பந்தயம்: 7-வது சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் டேனியல் வெற்றி

Written By Unknown on Tuesday, June 10, 2014 | 3:57 AM

பார்முலா-1 கார் பந்தயத்தின் 7-வது சுற்றான கனடியன் கிராண்ட்பிரீயில் ஆஸ்திரேலிய வீரர் டேனியல் ரிச்சியர்டோ முதலிடத்தை பிடித்தார்.

இந்த ஆண்டுக்கான பார்முலா-1 கார் பந்தயம் 19 சுற்றுகளை கொண்டதாகும். இதன் 7-வது சுற்றான கனடா கிராண்ட்பிரீ பந்தயம் மாண்ட்ரியலில் நடந்தது. 305 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த பந்தயத்தில் 22 வீரர்கள் பங்கேற்று மின்னல் வேகத்தில் காரை செலுத்தினார்கள்.

விறுவிறுப்பான இந்த பந்தயத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 24 வயதான டேனியல் ரிச்சியர்டோ (ரெட்புல் அணி) 1 மணி 39 நிமிடம் 12.830 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதலிடத்தை பிடித்தார். இதன் மூலம் பார்முலா-1 பந்தயத்தில் வெற்றி கண்ட 4-வது ஆஸ்திரேலியர் என்ற பெருமையை பெற்றார்.

புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடித்து வரும் ஜெர்மனி வீரர் நிகோ ரோஸ்பெர்க் (மெர்சிடஸ்) 4.2 வினாடி பின்தங்கியதால் 2-வது இடத்துடன் திருப்திபட வேண்டியதானது. 2-வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ்) காரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியில் விலக நேர்ந்தது. கடைசி கட்டத்தில் பெலிப் மாசா (பிரேசில்), போர்ஸ் இந்தியா வீரர் செர்ஜி பெரேஸ் ஆகியோரின் கார்கள் பயங்கரமாக மோதியதில் இருவரும் காயமின்றி தப்பினார்கள். முன்னாள் சாம்பியனான ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் (ரெட்புல்) டேனியலை விட 5.2 வினாடி பின்தங்கிய நிலையில் பந்தய தூரத்தை கடந்து 3-வது இடம் பெற்றார். போர்ஸ் இந்தியா வீரர் நிகோ ஹூல்கென்பெர்க் 5-வது இடத்தை பிடித்தார்.

7-வது சுற்றுகள் முடிவில் ஜெர்மனி வீரர் நிகோ ரோஸ்பெர்க் (மெர்சிடஸ்) 140 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ்) 118 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலிய வீரர் டேனியர் ரிச்சியர்டோ (ரெட்புல்) 79 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

பார்முலா-1 கார் பந்தயத்தின் 8-வது சுற்று பந்தயம் ஆஸ்திரியாவில் வருகிற 22-ந் தேதி நடக்கிறது.
Share this post :

Post a Comment

 
Support : Gossip Tamil | GPT Template | GPT Template
Copyright © 2011. Gossip Tamil - All Rights Reserved
Template Created by Gossip Tamil Published by GPT Template
Proudly powered by Blogger