Headlines News :
Home » » லிங்காவைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் எந்திரன் 2.. ?

லிங்காவைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் எந்திரன் 2.. ?

Written By Unknown on Friday, June 6, 2014 | 5:41 AM

தமிழ்த்திரைப்பட வரலாற்றிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படம் எந்திரன். ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி சிட்டி ரோபோவாகவும், வசீகரன் என்ற விஞ்ஞானியாகவும் இரட்டை வேடங்களில் இப்படத்தில் நடித்திருந்தார்.

ரஜினிக்கு ஜோடியாக இப்படத்தில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் பிளாக் பஸ்டர் ஹிட்டாகி, எந்திரன் படத்தின் வெற்றிக்கு பேருதவி புரிந்தன. மீண்டும் ஷங்கரும், ரஜினியும் இணைந்து தற்போது எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இருப்பதாக தகவல் அடிபடுகிறது.

விக்ரம் நடிப்பில் எடுக்கப்பட்ட ஐ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் தற்போது பிஸியாக இருக்கிறார் இயக்குநர் ஷங்கர். அதேபோல் கே.எஸ்.ரவிகுமாரின் இயக்கத்தில் லிங்கா படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி.

இந்த இரண்டு படங்களும் வெளியான பிறகு இவர்கள் மீண்டும் இணைகிற எந்திரன் 2 படம் தொடங்கப்படவிருக்கிறது. 240 கோடி செலவில் தயாராக உள்ள இப்படத்தை கல்பாத்தி அகோரம் மறுத்துவிட்டதால் தற்போது ஈராஸ் இன்டர்நேஷனல் இப்படத்தை தயாரிக்க முன் வந்திருக்கிறது.
Share this post :

Post a Comment

 
Support : Gossip Tamil | GPT Template | GPT Template
Copyright © 2011. Gossip Tamil - All Rights Reserved
Template Created by Gossip Tamil Published by GPT Template
Proudly powered by Blogger