Headlines News :
Home » » அறியாமல் சகோதரியை மணந்து பல குழந்தைகள் பெற்ற சகோதரன்

அறியாமல் சகோதரியை மணந்து பல குழந்தைகள் பெற்ற சகோதரன்

Written By Unknown on Friday, June 6, 2014 | 6:05 AM

சவுதி அரேபிய நாட்டில் ஒருவர் திருமணமாகி 25 வருடங்களுக்கு பின் தனது மனைவிதான் சிறுவயதில் தொலைந்துபோன சகோதரி என்பதை அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்து அவரை விவாகரத்து செய்துள்ளார்.

சவுதி அரேபியாவில் உள்ள ஒரு தம்பதிகளுக்கு திருமணமாகி 25 வருடங்கள் ஆகின்றன. அவர்களுக்கு 7 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தனது மனைவிதான் சிறுவயதில் தொலைந்த தனது அன்பு சகோதரி என்பது 25 வருடங்களுக்கு பின்னர் உறவினர் ஒருவர் கொடுத்த தகவலின்பேரில் தெரிய வந்தது. பின்னர் இருவரும் டி.என்.ஏ பரிசோதனை செய்து பார்த்ததில் இருவரும் ஒரே தாய்க்கு பிறந்த உண்மை தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் மனைவியாகிய சகோதரியை விவாகரத்து செய்ய முடிவு செய்து நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். நீதிமன்றமும் அவர்கள் தந்த ஆதாரங்களை ஏற்றுக்கொண்டு விவாகரத்து வழங்கியது. சகோதரியை திருமணம் செய்த நபருக்கு கடும்தண்டனை வழங்கவேண்டும் என Saudi Arabia’s mufti என்ற அமைப்பு பரிந்துரை செய்தபோதிலும் நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. அவர்களுக்கு பிறந்த ஏழு குழந்தைகளையும் அவர்களுடைய தாயிடம் இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Share this post :

Post a Comment

 
Support : Gossip Tamil | GPT Template | GPT Template
Copyright © 2011. Gossip Tamil - All Rights Reserved
Template Created by Gossip Tamil Published by GPT Template
Proudly powered by Blogger