Headlines News :
GossiP Tamil. Powered by Blogger.

அழகு

Showing posts with label அஜித். Show all posts
Showing posts with label அஜித். Show all posts

இயக்குனர் சுந்தர்.சி அஜித்திற்காக ஒரு கதையை தயார் செய்துள்ளாராம்...

கௌதம் மேனன் இயக்கத்திற்கு பிறகு ‘தல’ அஜித் யாருடைய படத்தில் நடிக்கப்போகிறார் என்ற பேச்சு அலை கோடம்பாக்கத்தில் எழுந்துள்ளன.சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் வீரம் படம் பொங்கல் ஜல்லிகட்டில் களமிறங்க தயாராக உள்ளது.


இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 15ம் திகதி முதல் கௌதம் மேனன் இயக்கவிருக்கும் பெயரிப்படாத படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்.


ஆனால் இந்தப்படத்திற்கு பிறகு தலயின் அடுத்த படம் யாருக்கு என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், காற்று வழியாக இரண்டு தகவல்கள் கசிந்துள்ளன.


சூப்பர் ஸ்டாருக்காக தயாரிக்கப்பட்ட கதையை எடுத்துக்கொண்டு அஜித்தை அனுகியுள்ளாராம் கேவி.ஆனந்த். மற்றொருபுறம் இயக்குனர் சுந்தர்.சி அஜித்திற்காக ஒரு கதையை தயார் செய்துள்ளாராம்.


ஆனால் இதற்கெல்லாம் ஒரு முடிவும் இன்னும் வெளியாகவில்லை, புத்தாண்டை கொண்டாட அவுஸ்திரேலியா பறந்த அஜித் திரும்பி வந்த பிறகே இதற்கான பதில்கள் கிடைக்குமாம்.

அஜித் , தம்னா நடிக்கும் ''வீரம் '' பட டீஸர்...

மாட்டு வண்டி ஓட்டிய அஜீத்!

சிட்டி சப்ஜெக்டுகளில் என்னதான் தூசு படியாமல் நடித்தாலும், கிராமத்து கதை என்று வருகிறபோது சேற்றுக்குள் உருண்டு புரள்கிற மாதிரியான காட்சிகளும் இருக்கும். ஆரம்பம் படம் வரை ஜீன்ஸ்-டீசர்ட் என்று நடித்துக்கொண்டிருந்த அஜீத், வீரம் படத்தில் வேஷ்டி-சட்டைக்கு மாறியுள்ளார். ஐந்து அண்ணன்-தம்பிகளில் ஒருவராக நடித்திருக்கிறார்.


இரண்டு குடும்பத்திற்கிடையே நடைபெறும் பிரச்னை என்பதால், முதலில் பாசமிகு அண்ணனாக நடித்துள்ள அஜீத், பின்னர் குடும்பத்துக்காக ஆக்ஷன் கோதாவில் குதிக்கிறாராம். மேலும், தமன்னாவை வாய்க்கால் வரப்புகளில் துள்ளிக்குதித்து காதலிக்கும் ரொமான்ஸ் காட்சிகளும் உள்ளதாம்.


மேலும், ஒரு சண்டை காட்சியில் மாட்டு வண்டியில் தப்பித்து செல்லும் வில்லன்களை, தானும் ஒரு மாட்டு வண்டியில் அமர்ந்தே துரத்தி துரத்தி சண்டை செய்யும் காட்சியிலும் நடித்துள்ளாராம் அஜீத்.


சில நாட்களாக இந்த காட்சியை படமாக்கி முடித்த பிறகு, அந்த கிராமத்து மக்கள் அனைவருக்கும் உணவு அளிக்கப்பட்டதாம். அஜீத் சார்பிலேயே இந்த விருந்து நடத்தப்பட்டதால் அவரே கிராம மக்களுக்கு உணவு பரிமாறினாராம்.

வீரம் வெற்றி பெற திருப்பதியில் மொட்டை அடித்துள்ளார் - அஜித்

1484956_371891362955125_829401766_n ajith-and-director-siva-243x300

‘வீரம்’ படம் வெற்றி பெற அஜித் திருப்பதிக்குச் சென்று மொட்டை அடித்துள்ளார். அவருடன் அந்த படத்தின் இயக்குனர் சிவாவும் மொட்டை அடித்துள்ளார்.
இன்று காலை முதலே சமூக வலைத் தளங்களில் இந்த புகைப்படம் பல ‘ஷேர்’களைக் கண்டு வருகிறது.
அஜித் இதுவரை இப்படி ஒரு தோற்றத்தில் யாருமே பார்த்ததில்லை. அஜித் ஒரு சிறந்த பக்தர் என்பதும் கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே.
அஜித் அடிக்கடி திருப்பதிக்குச் சென்று வந்தாலும் தற்போது மொட்டை அடித்துள்ளார் வீரம்’ வெற்றி பெற அஜித் ‘என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித்தின் இந்த புதிய தோற்றம் பற்றித்தான் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பரிமாறி வருகிறார்கள்…



 
 
mas template
Support : Gossip Tamil | GPT Template | GPT Template
Copyright © 2011. Gossip Tamil - All Rights Reserved
Template Created by Gossip Tamil Published by GPT Template
Proudly powered by Blogger