Headlines News :
GossiP Tamil. Powered by Blogger.

அழகு

Showing posts with label பணம். Show all posts
Showing posts with label பணம். Show all posts

நடிகர் மயில்சாமியை பணம் கேட்டு மிரட்டிய மர்மநபர்...

tamil-caomedy-actor-mayilsamy-latest-stills-2_720_southdreamz


விருகம்பாக்கத்தில் நடிகர் மயில்சாமியை பணம் கேட்டு மிரட்டிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூள், தில், வருஷமெல்லாம்வசந்தம், பட்டத்துயானை உள்பட ஏராளமான தமிழ்ப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் மயில்சாமி. சென்னை விருகம்பாக்கம், சாலிகிராமம், வெங்கடேஷ்வரா நகர் பகுதியில் வசித்து வருகிறார்.


இவர் விருகம்பாக்கம் போலீசில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அந்த புகாரில், நேற்றுமுன்தினம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தேன், அப்போது செல்போனுக்கு வந்த அழைப்பை எடுத்து பேசியபோது, அதில் பேசிய மர்ம நபர் ‘நீங்கள் எனக்கு ரூ.50 ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும், இல்லையென்றால் உங்களது விஷயங்களை வெளியே சொல்லிவிடுவேன்’ என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார் என்று கூறியுள்ளார்.


இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைச்சுவை நடிகர் மயில்சாமியிடம் செல்போனில் பணம் கேட்டு மிரட்டியது யார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மிரட்டல் வந்த செல்போன் எண்ணை தொடர்புகொண்டபோது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 
mas template
Support : Gossip Tamil | GPT Template | GPT Template
Copyright © 2011. Gossip Tamil - All Rights Reserved
Template Created by Gossip Tamil Published by GPT Template
Proudly powered by Blogger