சார்ஜாவிலிருந்து கோவை வந்த விமானத்தில் நூதன முறையில் கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். சார்ஜாவிலிருந்து கோவைக்கு ஏர் அரேபியா விமானம் வந்தது. விமானத்தில் இருந்த கேரளா காசர்கோடு பகுதியை சேர்ந்த சலாம் என்பவரை சுங்கத்துறையினர் பரிசோதனை நடத்தினர்.அப்போது அவர் தன்னுடன் கொண்டு வந்திருந்த எமர்ஜென்சி விளக்கில் விளக்கில் ரூ.20 லட்சத்திற்கும்மேற்பட்ட மதிப்பு கொண்ட 935 கிராம் எடை அளவுள்ள 8 தங்க கட்டிகளை மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்து அதனை பறிமுதல் செய்தனர்.
மேலும் சலாமை கைது செய்த சுங்கத்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோவை வழியாக தங்கம் கடத்தி வருவது அதிகரி்த்து வந்தது. பின்னர் தீவிர கண்காணிப்பு காரணமாக குறைந்து காணப்பட்ட நிலையில் மீண்டும் தங்கம் கடத்தி வருவது துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment