Headlines News :
Home » , » சீனாவுடனான எல்லையில் சாலைகளை மேம்படுத்த மோடி அரசு தீவிரம்

சீனாவுடனான எல்லையில் சாலைகளை மேம்படுத்த மோடி அரசு தீவிரம்

Written By Unknown on Thursday, June 12, 2014 | 8:03 PM


சீனாவுடனான எல்லையில் சாலைகளை மேம்படுத்த மோடி தலைமையிலான மத்திய அரசு மிகவும் தீவிரமாக உள்ளது. இதற்கு தடையாக உள்ள சுற்றுச்சூழல் அனுமதி குறித்து உடனடியாக முடிவெடுக்கும் படி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சீனா, இந்தியாவுடனான தனது எல்லையில் சாலை வசதிகளை மேம்படுத்தியதுடன், எல்லைக்கு அருகே ரயில் பாதைகளை அமைக்கும் பணிக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இந்தியாவுடன் போர் ஏற்படும் பட்சத்தில், போர் கருவிகள் மற்றும் வீரர்களை உடனடியாக எல்லைக்கு அனுப்ப இந்த நடவடிக்கை பயன்படும். சீனாவின் இந்த முயற்சிக்கு பதிலடி தரும் வகையில், அந்நாட்டுடனான எல்லையில் சாலைகளை மேம்படுத்த இந்தியா முயற்சி எடுத்து வருகிறது. எனினும், இதற்கு பெரும் முட்டுக்கட்டையாக சுற்றுச்சூழல் அனுமதி உள்ளது.

கடந்த 2003ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட காடுகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், இந்தியா சீனா இடையேயான எல்லைப் பகுதிகள் வருவதால், அதற்கு மத்திய மற்றும் மாநில அரசின் சுற்றுச்சூழல் அனுமதி தேவை. மாநில அரசைப் பொறுத்தவரையில் இத்திட்டங்கள் 90 நாட்களுக்குள்ளும், மத்திய அரசைப் பொறுத்தவரையில் 60 நாட்களுக்குள்ளும் அனுமதி வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்த கால அளவுகள் பின்பற்றப்படுவதில்லை.

இது தொடர்பான பைல்கள் அரசு அலுவலகங்களில் மாதக்கணக்கில் தேங்கிக் கிடக்கின்றன. எல்லையை ஒட்டி 80 சாலை திட்டங்கள் இது போன்ற காரணங்களால் தேங்கிக் கிடக்கின்றன. இதே போல், இந்திய ராணுவம் மற்றும் விமானப்படைக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுக்காக சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இத்திட்டமும் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது, இத்திட்டங்களில் கவனம் செலுத்தியுள்ள மத்திய அரசு, சுற்றுச்சூழல் அனுமதி குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளுக்கும், மத்திய சுற்றுச்சூழல் துறைக்கும் அறிவுறுத்தியுள்ளது. 
Share this post :

Post a Comment

 
Support : Gossip Tamil | GPT Template | GPT Template
Copyright © 2011. Gossip Tamil - All Rights Reserved
Template Created by Gossip Tamil Published by GPT Template
Proudly powered by Blogger