எதிர்க்கட்சி தலைவர் பதவி, காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, சபாநாயகருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா கடிதம் எழுதியுள்ளார். தராத பட்சத்தில் போரட்டம் நடத்தும் நிலைக்கு காங்., தள்ளப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில், பா.ஜ. கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது.
மொத்தமுள்ள 543 இடங்களில், காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சி தகுதி பெறுவதற்கு மொத்தத்தில் 10 சதவீதம் அதாவது குறைந்தது 55 இடங்களையாவது பெற வேண்டும். ஆனால், எதிர்க்கட்சி வரிசையில் அமர பெற வேண்டிய இடங்களை, எந்த கட்சிகளும் பெறவில்லை. இதனையடுத்து, எதிர்க்கட்சி பொறுப்பு யாருக்கு வழங்கப்படும் என்பது மர்மமாகவே இருந்து வருகிறது.

Post a Comment