Headlines News :
Home » » கடவுள் இல்லைன்னு நான் எப்போ சொன்னேன்? - விவேக்

கடவுள் இல்லைன்னு நான் எப்போ சொன்னேன்? - விவேக்

Written By Unknown on Friday, June 6, 2014 | 12:12 AM

கடவுள் இல்லையென்று நான் எப்போதுமே சொன்னதில்லை. மூட நம்பிக்கைகளைத்தான் கிண்டலடித்து காமெடி செய்திருக்கிறேன், என்றார் நடிகர் விவேக். பல ஆண்டுகளாக முன்னணி நகைச்சுவை நடிகராகத் திகழும் விவேக், முதன்முறையாக கதாநாயகனாக, நடித்துள்ள படம் ‘நான்தான் பாலா'. இப்படத்தை இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக இருந்த ஆர்.கண்ணன் இயக்கியுள்ளார். 

விவேக் ஜோடியாக ஸ்வேதா என்ற புதுமுகம் நடிக்கிறார். படத்தில் விவேக் சீரியஸ் வேடத்தில் நடிப்பதால், காமெடி பொறுப்பை செல் முருகனும் மயில்சாமியும் ஏற்றுள்ளனர். இந்தப் படம் வரும் ஜூன் 13-ம் தேதி வெளியாகிறது. அதையொட்டி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் விவேக். அவர் அளித்த பேட்டி: நான்தான் பாலா ஒரு நேர்மையான, ஏழை பிராமணனின் கதை. கும்பகோணத்தில் பெருமாள் கோவில் பூசாரியான பாலா, வயதான தனது தாய், தந்தைக்காக அமெரிக்காவில் கிடைக்கும் பெரிய வேலையையும், திருமணத்தையும் தவிர்த்து வாழ்ந்து வருகிறான். காஞ்சிபுரத்தில் வசிக்கும் சௌராஷ்டிரா குடும்பத்தை சேர்ந்த நாயகி வைசாலிக்கும் பாலாவுக்கும் காதல். இவர்களுடைய காதலை புரிந்துகொண்ட, கூலிப்படையைச் சேர்ந்த பூச்சி இவர்களுக்கு திருமணம் செய்துவைக்க நினைக்கிறான். இவர்களுக்கு திருமணம் நடக்கப் போகும் தருவாயில் பூச்சி பற்றிய முழு விவரமும் பாலாவுக்கு தெரியவருகிறது.

இறுதியில் துளசி தீர்த்தமா? தெறிக்கும் ரத்தமா? என்பதுதான் க்ளைமாக்ஸ். இந்த கதையை கேட்ட இயக்குனர் பாலா, இந்த கதாபாத்திரத்திற்கு விவேக்தான் பொருத்தமாக இருப்பார் என்று இயக்குனர் கண்ணனிடம் பரிந்துரைத்திருக்கிறார். நான் ஆரம்பத்தில் நடிக்க மறுத்து வந்தேன். ஆனால் இரண்டரை ஆண்டுகள் அவரும் காத்திருந்தார். இப்போதான் ரசிகர்கள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிற பக்குவத்திற்கு வந்து விட்டார்களே... எனவே நடிக்க ஒப்புக் கொண்டேன். 

இயக்குனர் கண்ணன் தனது குருநாதர் பாலா மீதுள்ள பக்தியினாலேயே இப்படத்திற்கு ‘நான்தான் பாலா' என்ற பெயரை வைத்திருக்கிறார். தமிழ் சினிமா வரலாற்றிலேயே சௌராஷ்டிரா சமூகத்தை பற்றியும், அந்த மொழியையும் இந்த படத்தில் முதன்முதலாக பதிவு செய்துள்ளோம். சௌராஷ்டிரா மொழி பேசி திறம்பட நடித்துள்ளார் நாயகி ஸ்வேதா. இந்தப் படத்துக்குப் பிறகு தனியாவே காமெடி பண்ணலாம் செல் முருகன். அந்த அளவு சிரிக்க வச்சிருக்காரு இந்தப் படத்தில்," என்றார் விவேக். 

அவரிடம் கேட்கப்பட்ட சில கேள்விகள்: 

பொதுவாக உங்கள் படங்களில் கடவுள் மறுப்பு அல்லது பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகளை மையப்படுத்தி காமெடி பண்ணுவீர்கள். ஆனால் இப்போது ஆத்திக பிராமணராக நடிப்பது பற்றி? 
என்னுடைய படங்களில் நான் எப்போதும் கடவுள் இல்லை என்று சொன்னது கிடையாது. நானும் கடவுளை கும்பிடுகிறவன்தான். கடவுள் பெயரால் மக்களை ஏமாற்றுவதைத்தான் வேண்டாம் என்று என்னுடைய படங்களில் நகைச்சுவையாக பதிவு செய்திருப்பேன். மூட நம்பிக்கைகளைத்தான் நான் கிண்டலடித்திருக்கிறேன். 

பிராமணர்களுக்கு ஆதரவான பிரச்சாரமா இந்தப் படம்? 
அப்படியெல்லாம் இல்லை. இது ஒரு கதை. பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை மையப்படுத்தி வருகிறது. அவ்வளவுதான். நான் பிராமணனாக நடிப்பது முதல் முறையுமல்ல. ஏற்கெனவே சில படங்களில் நடித்திருக்கிறேன். 

காமெடியன்கள் எல்லோரும் ஹீரோவாகிட்டீங்களே.. அப்புறம் யார்தான் காமெடி செய்வது? 
நான் ஒண்ணும் இந்தப் படத்துக்குப் பிறகு காமெடியே பண்ண மாட்டேன்னு சொல்ல மாட்டேன். என்னை மாதிரி எல்லோருக்குமே ஹீரோவா பண்ணனும்னு ஒரு ஆசை இருக்கும். இந்தப் படம் அதை நிறைவேத்தியிருக்கு. மத்தபடி, நான் இப்போதும் எல்லோர் கூடவும் காமெடி வேடங்கள்ல நடிச்சிக்கிட்டுதான் இருக்கேன்.
Share this post :

Post a Comment

 
Support : Gossip Tamil | GPT Template | GPT Template
Copyright © 2011. Gossip Tamil - All Rights Reserved
Template Created by Gossip Tamil Published by GPT Template
Proudly powered by Blogger