Headlines News :
Home » » துரத்தி வந்த நபருக்கு தன் நிர்வாணத்தைக் காட்டிய இளம் பெண்

துரத்தி வந்த நபருக்கு தன் நிர்வாணத்தைக் காட்டிய இளம் பெண்

Written By Unknown on Thursday, June 5, 2014 | 11:49 PM

மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த ஆண் ஒருவரிடமிருந்து தப்பிப்பதற்காக பெண்ணொருவருவர் நிர்வாணமாக தோன்றிய சம்பவமொன்று அண்மையில் சீனாவின் டொங்குவான் நகரில் இடம்பெற்றுள்ளது.

பெயர் வெளியிடப்படாத குறித்த பெண்ணை தகாத முறையில் ஆணொருவர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்துள்ளார். அந்நபரிடமிருந்து தப்பிக்க யோசித்த பெண் வீதியினருகே காணப்பட்ட சதுக்கதிலுள்ள கொங்கிரீட் மேடைக்குச் சென்று தனது ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக உறங்குவதுபோன்று நடித்துள்ளார்.

இதனால் அப்பெண்ணைப் பின்தொடர்ந்த நபர் வெட்கமும் அதிர்ச்சியுமடைந்து அவ்விடத்தைவிட்டு சென்றுள்ளார். இது தொடர்பில் நேரில் கண்ட சிலர் கூறுகையில், பின்தொடர்ந்தவரை அதிர்ச்சிகுள்ளாக்க நினைத்த அப்பெண்ணின் யோசனை அவருக்கு வெற்றியளித்துள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அங்கு வந்த பொலிஸாரிடம் மேற்படி பெண் கூறுகையில், ‘நான் இவ்வாறு நடந்துகொண்டது ஆர்ப்பாட்டத்துக்காகவோ அல்லது கண்காட்சிக்காவோ இல்லை. என்னை பின்தொடாந்தவரை அதிர்ச்சிக்குள்ளாக்கி என்னை காப்பாற்றிக்கொள்ளவதற்காக மட்டுமே’ எனத் தெரிவித்துள்ளார்.

பொது இடத்தில் நிர்வாணமாக இருப்பது தண்டனைக்குரியது. இருப்பினும் இந்த விடயத்தில் பெண் மீது குற்றம் இல்லை என தீர்மானித்த பொலிஸார் அப்பெண் மீது சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை.
Share this post :

Post a Comment

 
Support : Gossip Tamil | GPT Template | GPT Template
Copyright © 2011. Gossip Tamil - All Rights Reserved
Template Created by Gossip Tamil Published by GPT Template
Proudly powered by Blogger