Headlines News :
GossiP Tamil. Powered by Blogger.

அழகு

நிர்வாணக் கோலத்தில் பிரபல தமிழ் நடிகை!

தமிழில் நடிகர் ஜெய் நடிப்பில் உருவான வாமனன் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி பின்பு சித்தார்த்துடன் 180 போன்ற சில படங்களில் நடித்தவர் நடிகை ப்ரியா ஆனந்த்.எப்போதுமே அந்தமாதிரி விசயங்களில்தான் இவரது பெயர் அடிபடுகிறது. சில காலங்களுக்கு முன்பு நீலப்படம் ஒன்றில் இவரைப்போலவே அச்சு அசல் ஒரு பெண் நடித்திருப்பதாக ஒரு செய்தி வெளியாகியது. ஆனால் அது தான் அல்ல வேறு யாரோ என்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில் தற்போது இன்னொரு சர்ச்சையான செய்தி வெளியாகியுள்ளது இவரைப்பற்றி. அதாவது ஒரு விளம்பரத்தில் முற்றும் துறந்து நிர்வாணமாக போஸ் கொடுக்கப் போகிறாராம்.

விலங்கு வதைக்கு எதிரான அமைப்பின் விளம்பரங்களில் விரைவில் ப்ரியா ஆனந்த் தோன்றப் போகிறாராம். பல பிரபலங்கள் உடம்பில் ஆடையணியாமல், விலங்குகளை வதைக்காதீர்கள் என்ற விளம்பர பட்டையை மட்டும் அணிந்தபடி போஸ் கொடுப்பார்கள். அப்படியென்றால் இவரும் அப்படித்தான் போஸ் கொடுக்கப்போகிறார் போலிருக்கிறது என்று இப்போதே கிசு கிசுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

மனைவியின் தாய்ப்பாலில் பாலாடைக் கட்டித் தயாரித்து விற்ற மனிதர்

தாய்ப்பாலை நாம் எல்லாம் புனிதமாக கருதிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அமெரிக்கர் ஒருவர் அதை விற்பனைப் பொருளாக்கி தாய்மையின் மேன்மையை கேள்விக்குறியாக்கி விட்டார்.அந்த நபரின் பெயர் டேணியல் அங்கரர். நியூயார்க்கைச் சேர்ந்த க்ளீ பிராசரி என்ற ஹோட்டலின் உரிமையாளர். இவரே ஒரு சமையல் கலைஞரும் கூட. 

இவர் தனது மனைவி லோரி மேசானின் தாய்ப்பாலிலிருந்து பாலாடைக் கட்டியைத் தயாரித்துள்ளார்.பின்னர் அதை தனது குழந்தைகளுக்குக் கொடுத்துள்ளார். அத்தோடு நில்லாமல் அதை விற்கவும் ஆரம்பித்து விட்டார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து அமெரிக்க உணவுத்துறை இந்த நூதன பாலாடைக் கட்டி விற்பனைக்குத் தடை போட்டு விட்டதாம்.

இதுகுறித்து டேணியல் கூறுகையில், நானாவது பாலாடைக் கட்டியைத்தான் தயாரித்தேன். ஆனால் ஆல்டன் பிரவுன் என்பவர் தனது மனைவியின் தாய்ப்பாலிலிருந்து வெண்ணையே எடுத்துள்ளார் என்றார்.

தொடர்ந்து டேணியில் கூறுகையில், நான் ஒரு சமையல் கலைஞர். எதையாவது புதிதாக கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவன். எனவேதான் இதைக் கண்டுபிடித்தேன். எனது மனைவியும் இதற்கு ஒத்துழைத்தார். எனது குழந்தைளும் அதை விருப்பமுடன் சாப்பிட்டனர். பசும்பாலின் சுவைதான் அதில் இருந்தது. நான் ஆஸ்திரியாவில் சிறுவனாக இருந்தபோது சுவைத்த பசும்பாலின் சுவை எனது மனைவியின் தாய்ப்பாலில் தயாரித்த பாலாடைக் கட்டியில் தெரிந்தது என்கிறார் டேணியில்.

அத்தோடு நில்லாமல் தனது மனைவியின் தாய்ப்பாலிலிருந்து பாலாகை கட்டியைத் தயாரித்தது எப்படி என்ற விளக்கத்தையும் தனது பிளாக்கில் குறிப்பிட்டுள்ளார் டேணியல்.

நிர்வாணமாக நின்று பாடம் நடத்திய ஆசிரியர் கைது

அமெரிக்காவில், பல்கலைக் கழக ஆசிரியர், பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, அவரது ஆடை அவிழ்ந்ததால், போலீசார் கைது செய்து உள்ளனர்.அமெரிக்காவின், மிச்சிகன் பல்கலைக் கழகத்தில், கணிதத் துறை பேராசிரியர் ஒருவர், பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, திடீரென அவரது ஆடை அவிழ்ந்ததால், மாணவர்கள் கூச்சலிட்டனர். உடனடியாக அவர் வெளியே ஓடிச் சென்று, தனது ஆடையை சரி செய்து கொண்டு உள்ளே நுழைந்துள்ளார்.

அவர் ஆடை அவிழ்ந்த நிலையில் உள்ள காட்சியை, சில மாணவர்கள் படம் எடுத்து விட்டனர். ஆசிரியர் நிர்வாணமாக நின்றது தொடர்பாக பல்கலைக் கழகம், போலீசுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இருப்பினும் அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. ஆடை அவிழ்ந்த நிகழ்ச்சிக்குக் காரணமானவர், பேராசிரியர் தானா, என்பதை போலீசார் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

' எதிர்கட்சி அந்தஸ்து தாருங்கள் '- சபாநாயகருக்கு சோனியா கெஞ்சல்

எதிர்க்கட்சி தலைவர் பதவி, காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, சபாநாயகருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா கடிதம் எழுதியுள்ளார். தராத பட்சத்தில் போரட்டம் நடத்தும் நிலைக்கு காங்., தள்ளப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில், பா.ஜ. கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது.

மொத்தமுள்ள 543 இடங்களில், காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சி தகுதி பெறுவதற்கு மொத்தத்தில் 10 சதவீதம் அதாவது குறைந்தது 55 இடங்களையாவது பெற வேண்டும். ஆனால், எதிர்க்கட்சி வரிசையில் அமர பெற வேண்டிய இடங்களை, எந்த கட்சிகளும் பெறவில்லை. இதனையடுத்து, எதிர்க்கட்சி பொறுப்பு யாருக்கு வழங்கப்படும் என்பது மர்மமாகவே இருந்து வருகிறது.

கோவை வந்த விமானத்தி்ல் தங்க கட்டிகள் பறிமுதல்

சார்ஜாவிலிருந்து கோவை வந்த விமானத்தில் நூதன முறையில் கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். சார்ஜாவிலிருந்து கோவைக்கு ஏர் அரேபியா விமானம் வந்தது. விமானத்தில் இருந்த கேரளா காசர்கோடு பகுதியை சேர்ந்த சலாம் என்பவரை சுங்கத்துறையினர் பரிசோதனை நடத்தினர்.அப்போது அவர் தன்னுடன் கொண்டு வந்திருந்த எமர்ஜென்சி விளக்கில் விளக்கில் ரூ.20 லட்சத்திற்கும்மேற்பட்ட மதிப்பு கொண்ட 935 கிராம் எடை அளவுள்ள 8 தங்க கட்டிகளை மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்து அதனை பறிமுதல் செய்தனர்.

மேலும் சலாமை கைது செய்த சுங்கத்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோவை வழியாக தங்கம் கடத்தி வருவது அதிகரி்த்து வந்தது. பின்னர் தீவிர கண்காணிப்பு காரணமாக குறைந்து காணப்பட்ட நிலையில் மீண்டும் தங்கம் கடத்தி வருவது துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சீனாவுடனான எல்லையில் சாலைகளை மேம்படுத்த மோடி அரசு தீவிரம்


சீனாவுடனான எல்லையில் சாலைகளை மேம்படுத்த மோடி தலைமையிலான மத்திய அரசு மிகவும் தீவிரமாக உள்ளது. இதற்கு தடையாக உள்ள சுற்றுச்சூழல் அனுமதி குறித்து உடனடியாக முடிவெடுக்கும் படி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சீனா, இந்தியாவுடனான தனது எல்லையில் சாலை வசதிகளை மேம்படுத்தியதுடன், எல்லைக்கு அருகே ரயில் பாதைகளை அமைக்கும் பணிக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இந்தியாவுடன் போர் ஏற்படும் பட்சத்தில், போர் கருவிகள் மற்றும் வீரர்களை உடனடியாக எல்லைக்கு அனுப்ப இந்த நடவடிக்கை பயன்படும். சீனாவின் இந்த முயற்சிக்கு பதிலடி தரும் வகையில், அந்நாட்டுடனான எல்லையில் சாலைகளை மேம்படுத்த இந்தியா முயற்சி எடுத்து வருகிறது. எனினும், இதற்கு பெரும் முட்டுக்கட்டையாக சுற்றுச்சூழல் அனுமதி உள்ளது.

கடந்த 2003ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட காடுகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், இந்தியா சீனா இடையேயான எல்லைப் பகுதிகள் வருவதால், அதற்கு மத்திய மற்றும் மாநில அரசின் சுற்றுச்சூழல் அனுமதி தேவை. மாநில அரசைப் பொறுத்தவரையில் இத்திட்டங்கள் 90 நாட்களுக்குள்ளும், மத்திய அரசைப் பொறுத்தவரையில் 60 நாட்களுக்குள்ளும் அனுமதி வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்த கால அளவுகள் பின்பற்றப்படுவதில்லை.

இது தொடர்பான பைல்கள் அரசு அலுவலகங்களில் மாதக்கணக்கில் தேங்கிக் கிடக்கின்றன. எல்லையை ஒட்டி 80 சாலை திட்டங்கள் இது போன்ற காரணங்களால் தேங்கிக் கிடக்கின்றன. இதே போல், இந்திய ராணுவம் மற்றும் விமானப்படைக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுக்காக சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இத்திட்டமும் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது, இத்திட்டங்களில் கவனம் செலுத்தியுள்ள மத்திய அரசு, சுற்றுச்சூழல் அனுமதி குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளுக்கும், மத்திய சுற்றுச்சூழல் துறைக்கும் அறிவுறுத்தியுள்ளது. 

உலக கோப்பை கால்பந்து போட்டி காண பயணம் ? சர்ச்சையில் கோவா அமைச்சர்கள் குழு


உலக கோப்பை கால்பந்து போட்டி துவக்கவிழா இன்று கோலாகலமாக நடக்கவுள்ளது. இதன் போட்டிகளை பார்தது ரசிக்க கோவா அமைச்சர்கள் 3 பேர், எம்.எல்.ஏ.,க்கள் 3 பேர் உள்பட 6 பேர் அரசு செலவில் புறப்படவுள்ளனர். இதனை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
இந்நிலையில் கோவாவில் பா.ஜ., ஆளும் கட்சியாக உள்ளது. இங்கு முதல்வர் மனோகர் பாரிக்கர் முதல்வராகவுள்ளார். 3 அமைச்சர்கள் மற்றும் 3 எம்.எல்.ஏ.,க்கள் கொண்ட குழுவினர், ஜுலை மாதம் நடக்கும் கால்இறுதி , அரை இறுதி மற்றும் பைனல் போட்டியை காண புறப்படுகின்றனர். ரியோடிஜெனிரோ செல்ல இதற்கு ரூ. 89 லட்சம் செலவாகும் என தெரிகிறது. இதற்கு அரசு பணத்தை செலவழிக்கலாமா என்று கேள்வி எழுந்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திரமோடி தலையிட்டு இதனை நிறுத்த வேண்டும் என கோரியுள்ளனர்.

இது குறித்து கோவா அமைச்சர் பர்டோடா கூறுகையில், நான் ஒரு கால்பந்து வீரர். அத்தோடு மட்டுமல்ல, பிரேசிலில் அந்நாட்டு ஏற்பாடுகள், மற்றும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யவே புறப்படுகிறோம். இது எங்களுக்கு ஒரு படிப்பினையை தரும் என்று கூறியுள்ளார். 

வெற்றியுடன் துவங்கியது பிரேசில், குரோஷியா தோல்வி

உலக கோப்பை கால்பந்து தொடரின் முதல் லீக் போட்டியில் நட்சத்திர நாயகன் நெய்மர் கைகொடுக்க, பிரேசில் அணி, குரோஷியாவை 3-1 என வீழ்த்தியது.

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ('பிபா') சார்பில் 4 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் உலக கோப்பை கால்பந்து தொடர், நேற்று பிரேசிலில் கோலாகலமாக துவங்குகியது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும், இத்தொடரின் போட்டிகளில் மொத்தம் 12 நகரங்களில் நடக்கிறது. சாவ் பாலோவில் நேற்று நடந்த முதல் லீக் போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள 5 முறை உலக சாம்பியன் பிரேசில் அணி, குரோஷியாவை எதிர்கொண்டது.
சொதப்பல் துவக்கம்:
பரபரப்பாக துவங்கிய முதல் பாதியின் 11வது நிமிடத்தில் பிரேசில்வீரர் மார்செலோ, 'சேம் சைடு ' கோல் அடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளி்த்தார். இதனால் குரோஷியா அணி 1-0 என ஆரம்பத்திலேயே சுலமாக முன்னிலை பெற்றது. அசராமல் தொடர்ந்து போராடிய பிரேசில் அணிக்கு நட்சத்திர வீரர் நெய்மர் (29வது நிமிடம்) முதல் கோல் அடித்து ஆறுதல் அளித்தார். மும்முரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இரு அணி வீரர்களும் தொடர்ந்து கோல் அடிக்க முயன்றனர். ஆனால் எதுவும் பலன் அளிக்கவில்லை. இதையடுத்து முதல் பாதியின் முடிவில், போட்டி 1-1 என சமநிலை வகித்தது.
நெய்மர் அபாரம்:
பின் விறுவிறுப்பாக துவங்கிய இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்திய பிரேசில் அணிக்கு நட்சத்திர வீரர் நெய்மர் (71) ஒரு கோல் அடித்தார். இதற்கு குரோஷியா அணி வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. தொடர்ந்து அசத்திய பிரேசில் அணிக்கு ஆஸ்கர் (90+1) மேலும் ஒரு கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஆட்டநேர முடிவில், பிரேசில் அணி 3-1 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தியது.
தொடரும் வரலாறு:
இதுவரை நடந்த உலக கோப்பை தொடர்களில், போட்டியை நடத்தும் நாடு, துவக்க போட்டிகளில் தோற்றதே கிடையாது. ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரேசிலும் நேற்று இதை இச்சாதனையை தக்கவைத்துக்கொண்டது. தவிர, குரோஷியா அணிக்கு எதிராக 2 வது வெற்றி பெற்ற பிரேசில் அணி தனது ஆதிக்கத்தை தொடர்ந்தது.
 
mas template
Support : Gossip Tamil | GPT Template | GPT Template
Copyright © 2011. Gossip Tamil - All Rights Reserved
Template Created by Gossip Tamil Published by GPT Template
Proudly powered by Blogger